தலைப்பு-தமிழ்-பண்பட்டமொழி - thalaippu_thamizh_panbattapazhamiamozhi

தமிழ் மொழி   – பண்பட்ட பழமை மொழி

இறைவனோடும் இவ்விகத்தோடும்

இணைந்து தோன்றிட்டு

காலங்களைக் கடந்து வாழ்ந்திடும்

பண்பட்ட பழமை மொழி

அடர்காடுகளில் கரடுமலைகளில்

அலைந்து திரிந்திட்ட முதல் மனிதன்

இயற்கையோடு இணைந்து உறவாடி

வடித்திட்ட இயற்கை மொழி

சொல்லொன்றை உயிர் ஓவியமாய்

உகமதில் வாழும் காவியமாய்

சிந்தனையைக் கடைந்து படைத்து

தீட்டிட்ட தொன்மை மொழி

தானே விதையுண்டு தாவரமாய்

வேரோடி ஆலமரமாய்த் தழைத்திட்டு

இலக்கண இலக்கியம் வளம் கொழுத்துச்

செழுத்திட்ட செம்மொழி

தெலுங்கு கன்னடம் துளு மலையாளம்

என இருபத்தொன்பது புதுமொழி விழுதுகள்

தன்னிலே ஈன்றெடுத்துப் பிறமொழி கலவாது

உயர்தனித் தமிழ்த் தாய்மை மொழி

தமிழ் வேந்தர்களும் மாந்தர்களும்

சங்கங்கள் நிறுவிடச் சான்றோர்கள்

இயிற்றிட்ட வாழ்வியியல் நூற்களால்

கல்வி சிறந்திட்ட நெறியியல் மொழி

திருநூற்கள் குறள் நாலடி சிலம்புடன்

தெய்வப் புலவர் திருவள்ளுவரையும்

தேன்கவி புலவன் கம்பனையும்

வரமாகப் பெற்றிட்ட சிறப்பு மொழி

தமிழகம் ஈழம் தன் தாயகத்தில்

மலேயா சிங்கை மொரிசு பிசி

எனப் புலம்பெயர்ந்த பன்னாட்டில்

தலைநிமிர்ந்து புகழ்சேர் உலக மொழி

கணிணியுகத்தில் தடம் பதித்து

அறிவியியல் மொழியாய் வளர்ந்திட்டு

இணையத்திலும் புதுமை, புரட்சி செய்து

நாளும் உயரும் நம் தாய் தமிழ் மொழி

அன்புடன் பனிகோ

http://paninilavan.blogspot.in/2013/06/blog-post.html

முத்திரை-நெஞ்சோடு - muthirai_nenjoadu