தலைவன் என்றே நினைக்காதே! – சச்சிதானந்தன் தெய்வசிகாமணி
தலைவன் என்றே நினைக்காதே!
அன்னையின் கருவில் சிதைவுற்றுப் பிறந்த,
பிண்டம் போலக் கிடக்காதே!
உன்னையும் தெருவில் நிறுத்தும் ஒருவனை,
தலைவன் என்றே நினைக்காதே!
மந்தையில் நரிஎனப் புகுந்திடும் நீசர்கள்,
மண்டையை உடைக்கவும் தயங்காதே!
சந்தையில் மறியென வாக்கிற்கு உயரிய,
விலை வைப்பார்கள் வீழாதே!
சந்தனம் என்றே சொல்லிச் சொல்லி,
சேற்றை வாரி இறைப்பார்கள்!
உன்தடம் அழித்து உரிமையைப் பறிக்க,
ஊளை இடுவார் மயங்காதே!
பந்தயக் குதிரையைப் போலத் தேர்தலில்,
பாய்ந்திடும் தலைவர்கள் எல்லாரும்,
உன்முதுகேறி ஓடுகிறார்! அதில்,
பொய்முகம் கொண்ட பேயர்களை,
பின்முதுகாம் புற முதுகிட்டே,
ஓடச் செய்வது உன் கடமை!
Leave a Reply