திருப்பூர் தேவியின் குறும்பாக்கள்

– விண்மீன்கள், ஆறு, புல்லாங்குழல்

 

 

வெறும் கூழாங்கற்கள் கிளிஞ்சல்களுடன்

அரற்றியது…

மணலையிழந்த ஆறு!

 

பெருங்கூட்டம்

எனப் பெயர் வாங்கின…

தனித்தனியான விண்மீன்கள்!

 

யார் ஒளித்து வைத்தது

குழலையும் இசையையும்…

மூங்கில் வனத்தினுள்?

 

 

  • வழக்குரைஞர் இரா.சுகுணாதேவி, திருப்பூர்