நான்
நான்
முதுமை என்பது எனக்கில்லை!
முனகலும் தவிப்பும் எனக்கில்லை!
நோய்கள் குறித்து வருத்தமில்லை!
நோதலும் சாதலும் எனக்கில்லை!
இளமை இன்றும் மனம் நிறைய
இன்னிசைப் பாடித் திரிகின்றேன்!
எனக்கும் மேலே உள்ளவனை
ஏக்கம் கொண்டு பார்ப்பதில்லை!
எனக்கும் கீழே இருப்பவனை
ஏளனம் செய்துச் சிரிப்பதில்லை!
இதயத் துடிப்பின் உயிர்த்துளியாய்
இயற்கை என்போன் இயக்குகிறான்!
அன்பும் அறிவும் நிறைந்தோர்கள்
அருகில் வாழும் காரணத்தால்
ஆசைகள் குறைந்த மனிதன் நான்!
அகந்தை இல்லாக் கவிஞன் நான்!
– பாவலர் கருமலைப் பழம் நீ
பேசி – 94444 50295
Leave a Reply