நான்

நான் முதுமை என்பது எனக்கில்லை! முனகலும் தவிப்பும் எனக்கில்லை! நோய்கள் குறித்து வருத்தமில்லை! நோதலும் சாதலும் எனக்கில்லை! இளமை இன்றும் மனம் நிறைய இன்னிசைப் பாடித் திரிகின்றேன்! எனக்கும் மேலே உள்ளவனை ஏக்கம் கொண்டு பார்ப்பதில்லை! எனக்கும் கீழே இருப்பவனை ஏளனம் செய்துச் சிரிப்பதில்லை! இதயத் துடிப்பின் உயிர்த்துளியாய் இயற்கை என்போன் இயக்குகிறான்! அன்பும் அறிவும் நிறைந்தோர்கள் அருகில் வாழும் காரணத்தால் ஆசைகள் குறைந்த மனிதன் நான்! அகந்தை இல்லாக் கவிஞன் நான்! – பாவலர் கருமலைப் பழம் நீ பேசி – 94444…

நான்!  –  அகரம் அமுதன்

நான்!    துன்பங்கள் யார்படினும் துடிக்கின்றவன் பிறர் கண்ணீரைக் கவிதையாய் வடிக்கின்றவன்!   கொடுமைக்கு அறம்பாடி முடிக்கின்றவன்  – அதன் குரல்வளை நெரித்துயிர் குடிக்கின்றவன்!   வன்முறை யார்செயினும் வெடிக்கின்றவன் – அந்தப் புன்முறை போய்மாளப் பொடிக்கின்றவன்!   பெயருக்கா எழுதுகோல் பிடிக்கின்றவன்? –என்றன் எழுத்தாலே இனப்பகை இடிக்கின்றவன்!   அகரம் அமுதன் http://agaramamutha.blogspot.in/2016/03/blog-post_76.html

பிரிக்கும் ‘நான்’, பிணைக்கும் ‘நாம்’ – இரா.ந.செயராமன் ஆனந்தி

நான்   நான் என்ற சொல் நாவினில் விதைக்காதீர் ! நாம் என்ற சொல் நாவினில் விதையுங்கள் ! நான் என்ற பாரம் தலைக்கு ஏற்றினால் வீழ்வது நாம் இல்லை ‘நீ’ என்பதை உலகம் இன்னும் உணரவில்லை ! நான் என்ற சொல் உதட்டைப் பிரிக்கும் பகைக்காரன் ! நாம் என்ற சொல் உதட்டை இணைக்கும் ஒற்றுமைக்காரன் ! நான் என்றால் மனிதர்களின் ஆங்காரம்! நாம் என்றால் மனிதன் அறிவின் அலங்காரம் நான் என்றால் உள்ளத்தின் அடையாளம் ! நாம்  என்றால் ஒற்றுமையின் சின்னம்…