(பங்குனி 22, 2046 ஏப்பிரல் 05, 2015 தொடர்ச்சி)

 

காட்சி – 19

 

அங்கம்    :     ஆண் சிட்டு, பெண் சிட்டு

இடம்      :      மரக்கிளை

நிலைமை  :     (பேடும் சிட்டும் மனமொன்றி

ஈடுபடல் நல் இன்பத்தில்)

பெண் :     சீழ்க்கை ஒலியும்! கைத்தட்டலும்

வானை முட்டுது! பார்த்தாயா?

ஆண் :     வாழ்வில் காண இன்பத்தை

வாழ்த்தொலி மூலம் கண்டுவிடும்

ஒருவகைக் கூட்டமாய் இருக்கலாம்!

என்றே ஆண்சிட்டு விடையிறுக்க

(குறுநகை கொண்டு பேடையும்

சிட்டின் கழுத்தை நீவியது)

 

(காட்சி முடிவு)

 two-sparrows10

 (பாடும்)