பொங்கல் வாழ்த்து
பாரினில் எங்கும் மக்கள்
பலநலம் பெற்று வாழ
சீரிய வழியில் எல்லாம்
சிறப்புகள் மேன்மே லோங்க
மார்கழித் திங்கள் சென்று
மலர்ந்த தைத்திங்கள் நாளில்
ஆர்வமோ டளித்தேன் இந்த
அணிமிகு பொங்கல் வாழ்த்தை!
– புலவர் பு.சீ.கிருட்டிணமூர்த்தி
புள்ளியியல் அலுவலர்(ஓய்வு)
தலைவர், இந்திய அரசின் மக்கள் கல்விநிறுவனம்
திருவொற்றியூர் பாரதிப்பாசறை
துணைத்தலைவர், சோழர் கலாலயம்,
இணைச்செயலர், ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம்
Leave a Reply