மாந்தர்குல வரலாறு – சுமதிசுடர்
கடற்கோளால் சிதறுண்டு கடல்கடந்து சென்றோம்;
கற்றறிவின் துணைகொண்டு சூழலுக்குள் வாழ்ந்தோம்;
அடக்குமுறை கொள்கையாளர் ஆட்சியினைப் பற்றி
அழித்துவிட்டார் பண்பாட்டுக் கூறுகளை மெல்ல;
கடந்துவந்த பயணத்தை ஓரளவே பதிந்தோம்;
காணாமல் விட்டவற்றை கண்டறிந்து பதிவோம்;
அடங்காத உணர்ச்சிநிலை ஆய்வுகளால் பயன்என்
ஆய்வுசெய்யும் சித்தனாகி அறம்செழிக்கச் செய்வோம்.
– சுமதிசுடர், பூனா
Leave a Reply