முன்னணியில் மூவர் – கவிஞர் சகன்
முன்னணியில் மூவர்
பாரதி
இனிமையும் வளமும் கொண்ட
எழில் மொழி தமிழே! அன்புக்
கனிவுடன் உலகமெல்லாம்
கலந்துற வேற்கத் தக்க
தனிமொழி! சுவைமிக் கோங்கித்
தனினிறை வெய்தி நிற்கும்
பனிமொழி! வாழ்த்த வந்த
பாரதிப் புகழும் வாழி!
பெரியார்
பொன்னான தமிழர், நாட்டுப்
புகழினைக் காற்றில் விட்டுத்
தன்மானம் சாய விட்டுத்
தமிழ்மொழிப் பற்றும் விட்டுப்
புன்மானப் புழுக்க ளென்னப்
புதைந் தொழிந் திருந்த போழ்து
தன்மான இயக்கந் தன்னைத்
தழைத்திடத் தந்தான் தந்தை!
அண்ணா
‘‘அன்னவன் பாதை காட்ட
அவன் வழி முரசு கொட்டும்
பின்னவன் இவன்’’ என் றிங்கே
பீடுறப் போற்றும் வண்ணம்
சொன்னலப் பெருக்கும் கல்விச்
சுடர் தரும் அறிவும் மிக்க
தென்னவன்! ‘அண்ணா’ என்னு
தீஞ்சுவைப் பெயரும் பெற்றோன்!
Leave a Reply