முற்காலத்தில் – சுருதி (இளையவள்)
மக்கள் ஆடிப்பாடி வாழ்ந்த ஊர்
நேற்று
அழுகுரல் எழுந்து
ஊழித் தாண்டவமாடி
இன்று
சுடுகாட்டுச் சாம்பலாய்க்கிடக்கிறது
மழையாயிற்று எறிகணை
இழந்த உறவுகள் போக
எஞ்சியவர் சித்தம் இழந்தனர்
எல்லாம் சூனியமாயிற்று
அழுகுரல் நிரம்பிய மண்
அதிர்விலிருந்து மீளவில்லை
முள்ளிவாய்க்கால்
முள்ளாய் தொண்டையில் சிக்கிற்று
தரவு : (இ)லியோ
Leave a Reply