தோழர் தியாகு எழுதுகிறார் 92  :  மறதிச் சேற்றில் புதைந்து போகாமல்

(தோழர் தியாகு எழுதுகிறார் 91: இழிதொழில்புனிதமா? தொடர்ச்சி) தோழர் தியாகு எழுதுகிறார் இனிய அன்பர்களே! மறக்க முயன்றாலும் மறக்க முடியாத ஆண்டு 2009. தமிழினத்தின் கூட்டு உளச்சான்றில் மாறா வடுவாய்ப் பதிந்து விட்ட முள்ளிவாய்க்கால் இனவழிப்புக்காக மட்டுமன்று, அப்படி ஒரு கொடுமை நடந்து விடாமல் தடுக்க தமிழீழத் தாயகமும் தமிழ்நாடும் புலம்பெயர் தமிழுலகும் உலகத் தமிழர்களும் நடத்திய உணர்வார்ந்த போராட்டங்களும் மறக்கவியலாதவை. மறக்கக் கூடாதவை. அந்த மறவா நிகழ்வுகளில் ஒன்று 2009 பிப்பிரவரி 19ஆம் நாள் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் காவல் துறை நடத்திய கொடுந்தாக்குதல். அந்தத் தாக்குதலில் மண்டையுடைந்து குருதி…

10 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்தல், பிரித்தானியா

10 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்தல், பிரித்தானியா  வைகாசி 04, 2050 சனி மே 18, 2019  ஆண்டுகள் பல கடந்தும் நீதிக்காகவும், விடுதலை வேட்கையோடு எம் மண்ணின்  விடுதலைக்காகவும் இறுதிப்போரில் வதைக்கப்பட்ட, கொல்லப்பட்ட எம் உறவுகளுக்காகவும் இலண்டன் மாநகரில் அணி திரள்வோம் வாரீர்! நிகழ்வு தொடர்பான மேலதிகத் தகவல்கள் பின்னர்அறியத்தரப்படும் தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம். தொடர்புகளுக்கு: சங்கீத்து பிரித்தானியத் தமிழர் பேரவை (BTF) 02088080465, 07814486087, 07734397383, 07943100035, 07508365678, 07974726095, 07769770710, 07888 709739 https://www.facebook.com/303646176403023/posts/

ஈழம் : துயரம் விலகவில்லை ! என்றாலும் நம்பிக்கை இழக்கவில்லை! – இலக்குவனார் திருவள்ளுவன்

ஈழம் : துயரம் விலகவில்லை ! என்றாலும் நம்பிக்கை இழக்கவில்லை!    ஈழம் என்பது இலங்கையின் மறுபெயர்தான். இலங்கை முழுமையும் தமிழருக்கே உரியது. எனினும் காலப்போக்கில், வந்தேறிச் சிங்கள மக்கள் பெரும்பான்மை வாழும் தீவாக மாறிவிட்டது. தமிழ், சிங்களவர் தவிர, அயலவர் வரும்பொழுதுகூட அங்கே இரண்டு தமிழ் அரசுகளும் ஒரு சிங்கள அரசும்தான் இருந்தன. ஆனால், பிரித்தானியரால், நாட்டை விட்டு வெளியேறும்பொழுது அவர்கள் செய்த சதியால், சிங்களர்கள் ஆதிக்கத்திற்குத் தமிழர்கள் இரையாகினர். சிங்கள வெறியர்களால் மொழிக்கும் இனத்திற்கும் கேடு பெருகியதால், உரிமையாட்சி செய்த தமிழினம்…

செயா அம்மையாருக்கு நன்றியும் வினாவும் : சொல்வீர்கள்! செய்வீர்களா? – செந்தமிழினி பிரபாகரன்

செயா அம்மையாருக்கு நன்றியும் வினாவும் சொல்வீர்கள்! செய்வீர்களா? செந்தமிழினி பிரபாகரன் மோடியை சந்தித்த செயா அம்மையார் தமிழ் நாட்டில் அகதிகளாக உள்ள ஈழத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வலியுறுத்தி உள்ளமைக்கு அம்மாவுக்கு ஈழத் தமிழர்களின் மனமார்ந்த நன்றி. அதே போல் ஈழத்தில் அப்பாவி ஈழத் தமிழர்களை படுகொலை செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனக் கேட்டமைக்கும் நன்றி. சந்தித்தீர்கள் மோடியை. கோரிக்கைகளை வலியுறுத்தினீர்கள். அதற்கு மேல்?? வழமை போல் எதுவும் நடக்காது என்பது எமக்கு நன்கு தெரியும். உங்களுக்கும் தெரியும் என…

மானுடப்பேரவல நினைவேந்தல் – அ.ஈழம் சேகுவேரா

காலப்பெருந்துயர் பகிர்வும், மானுடப்பேரவல நினைவேந்தல் அறிக்கையிடலும்,     ஈழத்தின் இதயப்பண் போராளிக்கலைஞன்  மாநாயகர்(மேசர்) சிட்டு அவர்களின் குரலில், ‘நிலமும் வானும் கடலும் நேற்று அதிர்ந்தது, அந்த நிலவும் வானில் இரவு நேரம் அழுதது. நத்திக்கடல் மௌனமாகக்கரைந்தது. வங்கக்கடல் கோபமாக இரைந்தது…’ என்று ஒலிக்கும் முல்லைத்தீவு வெற்றிச்சமர் நாயகர்களின் நினைவேந்தல் பாடல் காற்றைக்கிழித்து இசைக்க ஆரம்பித்ததும், முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு  முதன்மைச் சாலையில் பயணித்தவர்கள் அனைவரும் தமது போக்குவரத்து ஊர்திகளை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு, ‘விடுதலை’ எனும்  மாபெரும் மரத்திற்காகத் தமது உடல்களை இலட்சிய…

உருத்திரகுமாரனின் முள்ளிவாய்க்கால் 7ஆம் ஆண்டு நினைவுரைக் காணொளி

  நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையர்  உருத்திரகுமாரன் வழங்கிய நினைவுரைக் காணொளி https://www.youtube.com/watch?v=kp6pzZ2PAjY

சிங்கள வதைமுகாம் கொடுமைகள் 06 – மரு.து.வரதராசா:செவ்வி இர.சிரீகந்தராசா

(சிங்கள வதைமுகாம் கொடுமைகள் 05 – இன்  தொடர்ச்சி) 6/6 இர.சிறீகந்தராசா: நீங்கள் எவ்வளவு காலம் மொத்தமாக உள்ளே இருந்தீர்கள்? து.வரதராசா: மூன்றரை மாதங்கள் இருக்கும். இர.சிறீகந்தராசா: நீங்கள் வெளியில் வந்ததும் அங்கே என்ன செய்தீர்கள்? து.வரதராசா:  நாங்கள் வெளியில் வந்தவுடன் கடமையை மேற்கொள்ள முடியாமல் இருந்தது. ஏனென்றால், எங்களை மீண்டும் கடமையாற்ற விடுவதற்குப் பாதுகாப்பு அமைச்சு, இராணுவ அமைச்சு ஆகியவற்றிடம் இருந்து நலவாழ்வுத் திணைக்களத்திற்கு ஒப்புதல் கிடைக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அந்த நடவடிக்கையை எடுப்பதற்குக் கொஞ்ச காலம் எடுத்தது. அதன் பின்புதான்…

சிங்கள வதைமுகாம் கொடுமைகள் 05 – மரு.து.வரதராசா:செவ்வி இர.சிரீகந்தராசா

(சிங்கள வதைமுகாம் கொடுமைகள் 04 இன் தொடர்ச்சி) 5 இர.சிறீகந்தராசா: நீங்கள் அங்கு இருந்தபொழுது உடனிருந்த கைதிகள் உடலளவிலோ உளவியலளவிலோ ஏதேனும் வதைகளுக்கு உட்பட்ட காட்சிகளைக் காண முடிந்ததா? து.வரதராசா: உளவியல் தாக்குதல் எல்லாருக்குமே இருந்தது. எனக்குக் கூட! மற்றைய மருத்துவர்களுக்கும் எல்லாம். தொடக்கத்தில் நாங்கள் சொல்வதையெல்லாம் அவர்கள் நம்ப மறுத்திருந்தார்கள். மறுத்திருந்த பொழுது அவர்களுடைய சித்திரவதை முறைகளைச் சொல்வார்கள், உண்மையைச் சொல்லாவிட்டால் இப்படியெல்லாம் நடக்கும் என்று. இர.சிறீகந்தராசா: எடுத்துக்காட்டாக ஒன்றைக் கூறுங்கள்! து.வரதராசா: எங்களை அந்த இடத்திற்குக் கூட்டிக் கொண்டு போவதாகக் கூறுவார்கள்….

சிங்கள வதைமுகாம் கொடுமைகள் 04 – மரு.து.வரதராசா:செவ்வி இர.சிரீகந்தராசா

(சிங்கள வதைமுகாம் கொடுமைகள் 03 இன் தொடர்ச்சி) [இனிவரும் பகுதிகளில் கொழும்பு நான்காம் மாடியில் தான் எதிர்கொண்ட  இன்னல்களையும், தற்பொழுது புலம்பெயர் நாடுகளில் தான் மேற்கொண்டு வரும் பணிகளையும் விவரிக்கின்றார். தமிழீழ மக்களுக்கு இழைக்கப்பட்ட பெருங்கொடுமையான இன அழிப்பிற்குப் பன்னாட்டு நீதி உசாவலின் (விசாரணையின்) மூலமே தீர்வு கிட்ட வேண்டும் என்பதை அவர் வலியுறுத்துவதோடு, உள்நாட்டு உசாவல் (விசாரணை) எந்தப் பயனையும் தராது என்பதையும் ஆணித்தரமாக எடுத்துக் கூறுகின்றார். ‘ஈழமுரசு’ இதழுக்காக அவரைச் செவ்வி கண்டவர் கலாநிதி இர.சிறீகந்தராசா.] இர.சிறீகந்தராசா: நீங்கள் கிளிநொச்சி தடுப்பு…

தமிழ்த்தேசிய இனத்தின் ஒன்றுகூடல் – முள்ளிவாய்க்கால் பேரவல 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்

  மே 18 அன்று, முள்ளிவாய்க்காலை நோக்கிப் பெரும் மக்கள் கூட்டமாக திரண்டு வாருங்கள். இனப்படுகொலை நடத்தப்பட்ட மண்ணில் நின்றுகொண்டு, தமிழ் இனப்படுகொலைக்கு நீதி கோருவோம். வவுனியா மக்கள் குழு, முல்லைத்தீவு மாவட்ட  மக்கள் உரிமைக்கான அமையம், தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டுக் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கங்கள் (FSHKFDR – Tamil Homeland)   கூட்டாக அறைகூவல் ! கூட்டு ஊடக அறிக்கை: மே 18 அன்று, முள்ளிவாய்க்காலை நோக்கிப் பெரும் மக்கள் கூட்டமாக திரண்டு வாருங்கள்! இனப்படுகொலை நடத்தப்பட்ட மண்ணில்…