வணங்கிப் போற்றுகிறேன் வாழிய நீவிர்! – மறைமலை இலக்குவனார்
வணங்கிப் போற்றுகிறேன் வாழிய நீவிர்!
திட நெஞ்சுடனே களத்திலிறங்கிப்
பிடுங்கிப் பாம்புகள் கண்(டு)அஞ்சாமல்
மழைவெள்ளத்தில் உள்ளம் சுருங்கி
ஒடுங்கித் துன்புறும் மக்களை அணுகி
உணவும் உடையும் உறுபொருள் பலவும்
வழங்கும் பணியில் முனைந்து செயற்படும்
ஆற்றல்சார் இளைஞர் கூட்டத்தினரே!
வணங்கிப் போற்றுகிறேன் வாழிய நீவிர்!
முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும்
சொல்லாமல் கொடுத்த வள்ளல்கள் போலவே
அழியாப் புகழை அடைந்தீர்!வாழிய!
முனைவர் மறைமலை இலக்குவனார்
நம் தலைமுறைக்குக்குப் பின் மனிதமும், துணிச்சல்மிக்க ஆற்றலும் வாய்ந்த தமிழ்ப் பிள்ளைகள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை ஒளிர்கிறது.
வளரட்டும் மனிதம் ! வாழ்க இவர்கள் பணி என வாழ்த்துவோம்!