தலைப்பு-தமிழ்ப்புத்தாண்டு, உருத்திரா : thalaippu_puthaandu_urithira

 

உழவன் என்றொரு

உயர்ந்ததோர் தமிழன்

கிழக்கில் உதித்த கதிரையும்

ஒளி பாய்ச்சி நாற்று நட்டு

வழி காட்டி நன்று வைத்தான்.

விசும்பின் துளி கண்டு

பசும்பயிர் வளங்கள் கண்டான்.

இஞ்சியும் மஞ்சளும் கரும்பும்

சங்கத்தமிழ்ச் சுவைகள் ஆகி

தமிழ்ப் புத்தாண்டு  மலரும் இன்று.

பொங்கல் பொலிக!

பொங்கலோ பொங்கல்!

வள்ளுவனை உலகினுக்கே தந்து

வான் புகழ் கொண்ட

தமிழ் நாட்டின்

இனிய தமிழ் புத்தாண்டு இன்று.

எல்லோருக்கும் என்

இதயம் கனிந்த‌

இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்!

உருத்திரா