நடைமுறைப் புத்தாண்டில் நனிசிறந்து வாழியவே! – இலக்குவனார் திருவள்ளுவன்

எல்லா நாளும் ஒரு நாளே! இன்பமும் துன்பமும் வரு நாளே! இன்பம் வந்தால் மயங்கா தீர்! துன்பம் கண்டால் துவளா தீர்! பிறர் துன்பம் நீங்க உதவிடு வீர்! அவர்இன்பம் காண முயன்றிடு வீர்! மொழிச் சிதைப்பரை ஒதுக்கிடு வீர்! இனக்கொலைஞரை ஒழித்திடு வீர்! சாதிக் கொலைகள் இல்லாத சமயச் சண்டை மறைந்திட்ட ஏழ்மை எங்கும் காணாத நன்னாள்தானே எந்நாளும்! நாளும் மாறும் நாளில் இல்லை, உயர்வும் புகழும் வாழும் முறையும்! அல்லன நீக்கி நல்லன எண்ணில் ஒவ்வொரு நாளும் புது நாளே! இலக்குவனார்…

வான் புகழ் தமிழ் நாட்டின் புத்தாண்டு வாழ்த்துகள்! – உருத்திரா

  உழவன் என்றொரு உயர்ந்ததோர் தமிழன் கிழக்கில் உதித்த கதிரையும் ஒளி பாய்ச்சி நாற்று நட்டு வழி காட்டி நன்று வைத்தான். விசும்பின் துளி கண்டு பசும்பயிர் வளங்கள் கண்டான். இஞ்சியும் மஞ்சளும் கரும்பும் சங்கத்தமிழ்ச் சுவைகள் ஆகி தமிழ்ப் புத்தாண்டு  மலரும் இன்று. பொங்கல் பொலிக! பொங்கலோ பொங்கல்! வள்ளுவனை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ் நாட்டின் இனிய தமிழ் புத்தாண்டு இன்று. எல்லோருக்கும் என் இதயம் கனிந்த‌ இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்! உருத்திரா

நற்றமிழ்ப் பற்றோடு பொங்கலிட்டு வாழியவே! – மு.பொன்னவைக்கோ.

பொங்கல் புத்தாண்டு வாழ்த்துகள்! பூத்தது புத்தாண்டு பொங்கல் திருநாளில் போயிற்று ஓராண்டு பொன்னான வாழ்நாளில் சென்ற ஓராண்டில் செய்தோமா நற்பணிகள் என்றே சிந்திப்போம் ஏற்போம் தவறுகளை இன்றிந்த புத்தாண்டில் ஏற்றமுடன் நற்பணிகள் சாதிக்கச் சிந்திப்போம் சாதனைகள் செய்திடுவோம் பொங்கல் திருநாளில் அகமெனும் பானையில் அன்பெனும் நீரூற்றி அறிவெனும் அரிசியிட்டு பாசமெனும் பாலூற்றி நேசக் கரங்களினால் நேர்மை நெருப்பேற்றி தீந்தமிழ்த் தேனூற்றி தித்திக்கும் பொங்கலிட்டு ஒற்றுமை உணர்வுபொங்க உற்ற உறவினராய் நற்றமிழ்ப் பற்றோடு பொங்கலோ பொங்கலென பொங்கலிட்டு வாழியவே!  முனைவர் மு.பொன்னவைக்கோ