தலைப்பு-வாழியதமிழ் :thalaippu_vaazhiya thamizh_kavinmurugu

வாழிய தமிழ்

நல்லார் மடுத்த நற்றமிழே
நாவில் சுவைக்கும் தீஞ்சுவையே
எல்லா வளமும் நனிசிறக்க
எல்லைப் பொதிகை இசைத்தமிழை
கல்லா வொருவர் கயமையிலா
காலத் தேயாம் நற்றமிழை
பொல்லா மனதும் கற்றிடுமே
போற்றி வாழ்த்தும் செந்தமிழே!

கவிஞர் கு. நா. கவின்முருகு