ஊன்விற்று வாழ்வதும்தான் வாழ்வோ? – கு. நா. கவின்முருகு

ஊன்விற்று வாழ்வதும்தான் வாழ்வோ? பிணந்தின்னிக் கூட்டமடா இந்தக் கூட்டம் பிழைப்பிற்கு மானமின்றி விழுவர் காலில்! பணத்தையெண்ணிச் சுரண்டித்தான் மானம் கெட்டார் பாமரரின் உயிர்குடித்தும் லாபம் காண்டார்! குணமிழந்தே நாய்களைப்போல் அலைந்து சுற்றி குலம்செழிக்க குடிகெடுக்க தலைவர் ஆனார் மணந்துகொண்ட இல்லாளோ இணங்கா விட்டால் மக்களுக்கு நல்லவை செய்து வாழ்வார்! பிச்சைக்கே வாக்குவாங்கி கோட்டை போக பாட்டாளி வயிற்றுக்கோ செய்த தென்ன? இச்சைக்காம் நாற்காலி சண்டை, போட்டி இடுப்பிலுள்ள வேட்டிக்கோ கறைகள் உண்டு! எச்சையிலை நாய்களிடம் பட்ட பாடாய் எங்களுக்குத் திண்டாட்டம் விடிய லில்லை! சச்சுவுக்கு…

வள்ளுவனார் அறத்துப்பால் – கு. நா. கவின்முருகு

வள்ளுவனார் அறத்துப்பால்   1. கற்றாரோ வள்ளுவனார் அறத்துப் பாலை  கற்றிலாரும் அறத்தாள்வார் பெயரும் பெற்று சுற்றிடுவார் நிலமதிலே ஈகை இல்லா  துப்பில்லா மானிடரும் மாடே ஒப்பர் பெற்றிடுவோம் நற்பெயரும் அவனின் பாவால்  பேறுலகைக் காத்திடுமாம் அறமே செய்து சொற்றெடராய் அணிசெய்யும் அழகாய் நன்று  தொடர்வதுவும் குறளோதிப் பணிந்து செய்ய. 2. கொன்றார்கு உய்வில்லை செய்த நன்றி  கோமகற்கும் அதுவேயாம் மாற்று இல்லை சென்றார்க்கும் சிறப்பேயாம் கற்ற கல்வி  தீமையிலாச் சொல்பகரின் செவியில் இன்பம் வென்றாரும் பகைமையுமே வலிமை கண்டே  மேன்மக்கட் பேறுபெரும் அறமே…

வாழிய தமிழ்! – கவின்முருகு

வாழிய தமிழ் நல்லார் மடுத்த நற்றமிழே நாவில் சுவைக்கும் தீஞ்சுவையே எல்லா வளமும் நனிசிறக்க எல்லைப் பொதிகை இசைத்தமிழை கல்லா வொருவர் கயமையிலா காலத் தேயாம் நற்றமிழை பொல்லா மனதும் கற்றிடுமே போற்றி வாழ்த்தும் செந்தமிழே! கவிஞர் கு. நா. கவின்முருகு