ஊர்க்காதலுக்கு உறுமுகின்றார் – பாரதியார்
ஊர்க்காதலுக்கு உறுமுகின்றார்
நாடகத்தில் காவியத்தில் காதல் என்றால்,
நாட்டினர்தாம் வியப்பெய்தி நன்றாம் என்பர்;
ஊடகத்தே வீட்டினுள்ளே கிணற்றோரத்தே
ஊரினிலே காதல் என்றால் உறுமுகின்றார்;
பாடைகட்டி அதைக் கொல்ல வழி செய்கின்றார்;
பாரினிலே காதலென்னும் பயிரை மாய்க்க
மூடரெலாம் பொறாமையினால் விதிகள் செய்து
முறைதவறி இடர் எய்திக் கெடுக்கின்றாரே!
Leave a Reply