பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ்7/8 – கருமலைத்தமிழாழன்
(பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 6/8 – தொடர்ச்சி)
பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ்
7/8
சொற்பொழிவு கேட்பதற்கும் அறிஞ ரோடு
சொல்லாடல் நிகழ்த்துதற்கும் கவிஞர் தம்மின்
நற்கவிதை அவர்சொல்லத் துய்ப்ப தற்கும்
நாளிதழின் செய்திகளை அறிவ தற்கும்
பல்வேறு விளையாட்டில் திளைப்ப தற்கும்
பலநாட்டுப் பொருட்களினை வாங்கு தற்கும்
அற்புதமாய் நமக்குவாய்த்த இணையம் இந்த
அகிலத்தை வீட்டிற்குள் அடைத்த தின்று !
அறிவியலுக் கேற்றமொழி அல்ல வென்னும்
அறிவிலிகள் கூற்றையெல்லாம் பொய்யா யாக்கி
செறிவான கணிப்பொறியின் மொழியா யாகி
செம்மையான குறியீட்டின் எழுத்து மாகி
அறிகின்ற விசைப்பலகை பொதுவா யாகி
அறிஞரெல்லாம் போற்றுகின்ற சொல்தொ குப்பும்
நெறியான மென்பொருளின் தளம மைந்தே
நிகரில்லா இணையமொழி ஆன தின்று !
(தொடரும்)
பாவலர் கருமலைத்தமிழாழன்
9443458550
ஒசூர் தமிழ் வளர்ச்சி மன்றம்
சித்திரைத்திருவிழா கவியரங்கம்
நாள்: சித்திரை 02, 2048 / 15 -4 – 2017
தலைமை : முனைவர் ஆனைவாரி ஆனந்தன்
தலைப்பு : பல்துறையில் பசுந்தமிழ்
Leave a Reply