செம்மொழிப் போர்மறவர் சி.இலக்குவனார் – ச.ந.இளங்குமரன்

செம்மொழிப் போர்மறவர் சி.இலக்குவனார் தமிழ்வாழ்த்து (கலித்துறை) அகர முதலா னவளே அமிழ்தே அருள்வாய் இகர உகர உடல்நீ உயிர்நீ உணர்வாய் பகர்கிறே னிப்பா வரங்கில் பரவசம் கொள்வாய் பகர்வாய்  பகர்வதி ளங்குமர னல்லதமிழ் தானென்றே! (நேரிசை வெண்பா) தந்தைக்கு வாய்த்த தவப்புதல்வன் செந்தமிழ்ச்சீர் சிந்தை நிறைதிரு வள்ளுவன் – தந்தைதந்த செந்தமிழ்க் காப்புக் கழகமதை செவ்வனே முந்தியே காப்பார் முனைந்து (நேரிசை வெண்பா) தனித்தமிழை மீட்டெடுத்த தன்மான வீரன் கனித்தமிழ்ச் சொல்லன் கணியன் – இனித்ததமிழ் கல்விமொழி யாவதற்குக் கண்ணுறக்கம் விட்டொழித்த வல்லார் இலக்குவனார்…

அனைத்திந்திய சிறுவர் எழுத்தாளர் சங்கம்  தொடக்க விழா

அனைத்திந்திய சிறுவர் எழுத்தாளர் சங்கம்  தொடக்க விழா  அடையாறு, காந்தி நகர் அரசு நூலக வாசகர் வட்டத்தில் அனைத்திந்திய சிறுவர் எழுத்தாளர் சங்கத் தொடக்க விழாவும் சிறுவர் இதழ் வெளியீட்டு விழாவும் நடைபெற்றன.        இவ்விழாவிற்கு மூத்த இதழாளர் தீபம் எசு.திருமலை தலைமையேற்றார்.     கவிஞர் இராய.செல்லப்பா அனைவரையும் வரவேற்றார். அடையாறு நூலகர் சித்திரா, ஓய்வுபெற்ற நூலகரும் எழுத்தாளருமான ஆலந்தூர் கோ.மோகனரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.        அனைத்திந்திய சிறுவர் எழுத்தாளர் சங்கத்தின் நோக்கம் குறித்தும் சிறுவர் இதழ்களின் சமூகத் தேவை குறித்தும் எழுத்தாளரும் நூலக வாசகர் வட்டத் தலைவருமான வையவன்…

உலகத்திருக்குறள் பேரவையின் 3ஆம் ஞாயிறு

ஞாயிறு தை 08, 2049  சனவரி 21, 2018 மாலை 4.30 வள்ளுவர் குருகுலம் நடுநிலைப்பள்ளி தாம்பரம் (பேருந்துநிலையம் அருகில்) உலகத்திருக்குறள் பேரவையின் 3ஆம் ஞாயிற்றுக் கூட்டம் கவியரங்கம் வாழ்த்தரங்கம் கருத்தரங்கம் சிறப்புச்சொற்பொழிவு: புலவர் தெ.தட்சிணாமூர்த்தி   அன்புடன் புதுகை வெற்றிவேலன் பேசி 9444521773  

இலக்கியச்சோலை 100 ஆம் இதழ் வெளியீடு & கம்பதாசன் நூற்றாண்டு விழா,  சென்னை

  மார்கழி 02, 2048 – ஞாயிறு – திசம்பர் 17,2017 மாலை 5.30 – 7.30 தே.ப.ச.(இக்சா) மையம், எழும்பூர், சென்னை 600 008 இலக்கியச்சோலை 100 ஆம் இதழ் வெளியீடு கம்பதாசன் நூற்றாண்டு விழா கவியரங்கம் அன்புடன் சோலை தமிழினியன் 9840527782

தமிழ்க்கூடல், மாதவரம், சென்னை

கார்த்திகை 23, 2048 சனி  09.12.2017 பண்ணைத்தமிழ்ச்சங்கம் தமிழ்க்கூடல், மாதவரம், சென்னை – 51   கவியரங்கம் சிறப்புரை விருதுகள் வழங்கல்   கவிக்கோ துரை.வசந்தராசன்

பாரதியார் பிறந்தநாள் விழா, புழுதிவாக்கம்

கார்த்திகை 17, 2048 ஞாயிறு  திசம்பர் 03, 2017 மாலை 3.30 மணி தமிழ் இலக்கிய மன்றம் பாரதியார் பிறந்தநாள் விழா, புழுதிவாக்கம் கவியரங்கம் கருத்தரங்கம் சிறப்புரை :  புலவர்  செம்பியன் நிலவழகன் த.மகாராசன்

யாதும் ஊரே யாவரும் கேளிர் 8/8 – கருமலைத்தமிழாழன்

 (யாதும் ஊரே யாவரும் கேளிர் 7/8 – தொடர்ச்சி) யாதும் ஊரே யாவரும் கேளிர் 8/8 உயிர்பறிக்கும்    குண்டுகளைச்    செய்வோ   ரில்லை உயிர்மாய்த்து   நிலம்பறிக்கும்   போர்க   ளில்லை உயர்சக்தி   அணுக்குண்டு   அழிவிற்    கின்றி உயர்த்துகின்ற   ஆக்கத்தின்   வழிச   மைப்பர் உயரறிவால்   கண்டிடித   விஞ்ஞா   னத்தை உயர்வாழ்வின்   மேன்மைக்குப்  பயனாய்ச்   செய்வர் அயல்நாட்டை   அச்சுறுத்தும்   இராணு   வத்தின் அணிவகுப்பும்   போர்க்கருவி   இல்லை  அங்கே !   வான்மீது   எல்லைகளை   வகுக்க   வில்லை வாரிதியில்   கோடுகளைப்    போட   வில்லை ஏன்நுழைந்தாய்   எம்நாட்டு    எல்லைக்   குள்ளே என்றெந்த    நாட்டினிலும்  …

யாதும் ஊரே யாவரும் கேளிர் 7/8 – கருமலைத்தமிழாழன்

 (யாதும் ஊரே யாவரும் கேளிர் 6/8 – தொடர்ச்சி)   யாதும் ஊரே யாவரும் கேளிர் 7/8 பலமொழிகள்   பேசினாலும்   அன்பு   என்னும் பாலத்தால்   ஒருங்கிணைந்தே   வாழ்வார்  அங்கே கலக்கின்ற   கருத்தாலே   மொழிக   ளுக்குள் காழ்ப்புகளும்   உயர்வுதாழ்வு   இருக்கா  தங்கே இலக்கியங்கள்   மொழிமாற்றம்   செய்தே   தங்கள் இலக்கியமாய்ப்    போற்றிடுவர் !   கணினி   மூலம் பலரிடத்தும்   பலமொழியில்    பேசு   கின்ற பயனாலே   மொழிச்சண்டை   இல்லை  அங்கே !   நாடுகளுக்    கிடையெந்த   தடையு   மில்லை நாடுசெல்ல   அனுமதியும்   தேவை   யில்லை நாடுகளுக்    கிடையெந்த    பகையு   மில்லை…

யாதும் ஊரே யாவரும் கேளிர் 6/8 – கருமலைத்தமிழாழன்

(யாதும் ஊரே யாவரும் கேளிர் 5/8 – தொடர்ச்சி) யாதும் ஊரே யாவரும் கேளிர் 6/8 அறிவியலில்    உலகமெல்லாம்    அற்பு   தங்கள் அரங்கேற்றக்    கலவரங்கள்    அரங்க    மேற்றி அறிவிலியாய்க்   குறுமனத்தில்   திகழு   கின்றோம் அணுப்பிளந்து   அடுத்தகோளில்    அவர்க    ளேற வெறியாலே   உடன்பிறந்தார்    உடல்பி   ளந்து வீதியெலாம்    குருதியாற்றில்   ஓடம்   விட்டோம் நெறியெல்லாம்   மனிதத்தைச்   சாய்ப்ப   தென்னும் நேர்த்திகடன்   கோயில்முன்   செய்கின்    றோம்நாம் !   வானத்தை   நாம்வில்லாக    வளைக்க   வேண்டா வாடுவோரின்   குரல்கேட்க   வளைந்தால்    போதும் தேனெடுத்துப்   பசிக்குணவாய்க்    கொடுக்க   வேண்டா தேறுதலாய்   நம்கரங்கள்  …

1 2 6