(மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் 4/6 தொடர்ச்சி)

மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் 5/6

 

 

குறள்நெறி பரவின் குடியெலாம் சிறக்கும்                                    140

அமைதி நிலவும் அன்பு தவழும்

போர்முறை ஒழியும்; பொய்மை மறையும்

செம்மை ஆட்சி சீர்பெற் றோங்கும்’

என்றே கூறி இன்குறள் பாக்களை

தெருவெலாம் பரப்பச் செய்யும் தொண்டில்                                 145

உளம்உரை உடல்பொருள் ஒல்லுவ வெல்லாம்

அளித்திடக் காண்பாய் அகம்மிக மகிழத்

திங்கள் தோறும் திருக்குறள் கழகக்

கூட்டம் நடாத்தி நாட்டின் உயர்வைப்

பெருக்கிடும் பெரியார்; பிறர்க்கென வாழும்                                       150

உள்ளப் பெரியார்; உயர்குணச் செம்மல்.

சாதி மதங்கள் சழக்குடை அரசியல்

யாவும் கடந்தவர்; எவர்க்கும் இனியவர்.

ஆயினும்

வீட்டில் உள்ள நாட்டின் தலைவர்                                                             155

படங்களைக் காணின் பழுத்த ‘காங்கிரசு’

உறுப்பினர் என்பர்; உள்ளன வற்றைப்

பிறர்க்கென உதவும் பெற்றிமை கண்டு

பொதுவுறு உடைமையர் போலும் என்பர்

திருக்குறள் போற்றும் திருநெறி கண்டே                                        160

திராவிட இயக்கத் திறலினர் என்பர்

 

– பேராசிரியர் சி.இலக்குவனார்