மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் 6/6

(மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் 5/6  தொடர்ச்சி) மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் 6/6 உண்மை கூறா உலகில் வாழ்வது அம்ம கொடிது; அன்றியும் மாணவ! சொல்வ தொன்று; செய்வ தொன்று வீட்டில் ஒன்று; வெளியில் ஒன்று;                              165 கண்டால் ஒன்று; சென்றால் ஒன்று; நேர்மையும் இன்று; நிலையும் இன்று; அழுக்கா றென்ற ஆழ்கடல் உண்டே; அவாவெனும் கொடிய அராவும் உண்டே; வெகுளி யென்ற வெந்தீ உண்டே                              170 இன்னாச் சொல்எனும் ஈட்டியும் உண்டே தன்னலம் என்ற தாக்கணங்…

மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் 5/6

(மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் 4/6 தொடர்ச்சி) மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் 5/6     ‘குறள்நெறி பரவின் குடியெலாம் சிறக்கும்                                    140 அமைதி நிலவும் அன்பு தவழும் போர்முறை ஒழியும்; பொய்மை மறையும் செம்மை ஆட்சி சீர்பெற் றோங்கும்’ என்றே கூறி இன்குறள் பாக்களை தெருவெலாம் பரப்பச் செய்யும் தொண்டில்                                 145 உளம்உரை உடல்பொருள் ஒல்லுவ வெல்லாம் அளித்திடக் காண்பாய் அகம்மிக மகிழத் திங்கள் தோறும் திருக்குறள் கழகக் கூட்டம் நடாத்தி நாட்டின் உயர்வைப் பெருக்கிடும்…

மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் 4/6

(மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் :3 / 6 தொடர்ச்சி)     மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் 4/6 அவர்கருத் தறிந்தே அன்பாய் ஒழுகும்                                               110 தம்பியும் மக்களும் தமரும் பெற்றவர். கோவிந்த சாமியாம் கூறும் தம்பி கொடுப்பதும் கொள்வதும் குறைமிக வின்றி அறநெறி போற்றிடும் அரிய வணிகர். புன்னகை தவழும் நன்னல முகத்தர்.                                                  115 அடக்கமே வடிவம்; அன்பே பண்பு அண்ணனுக் கேற்ற அருள்உளத் தம்பியர் உடலால் இருவர் உளத்தால் ஒருவர் பகுக்க முயல்வோர் பயன்பெறத்…

மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் : 3/6

(மாணவர் ஆற்றுப்படை 2/6 – பேராசிரியர் சி.இலக்குவனார், தொடர்ச்சி)   மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் 3/6 ஆயினும்                                                                                          70 பாரியும் ஓரியும் வாழ்ந்த பாரில் உற்றுழி உதவும் நற்றவ வள்ளலார் அற்றோர் அல்லர்; ஆதலின் செல்வாய் அணி புதுக் கோட்டை; அண்ணன் வீடு எங்குள தெனநீ எவரை வினவினும்                                  75 அன்புடன்…

மாணவர் ஆற்றுப்படை 2/6 – பேராசிரியர் சி.இலக்குவனார்

மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் 2/6   என்றே அலமரும் இளைஞனை நோக்கி “அயரேல் வருந்தேல் அடைவாய் உதவி; தமிழகச் செல்வர் தம்இயல் அறிவேன்;                            35 அறம்பல புரிந்து அறவோர்க் களித்துத் தமிழைக் கற்றுத் தமிழ்ப்பணி புரிந்து கல்விக் கூடம் காண்தக அமைத்து நாடும் நலம்பெற நல்லன புரியார்; அழியாப் புகழை அடைய விரும்பார்                               40 உரையும் பாட்டும் உடையார் அன்றி மறையிலை போல் மாய்வோர் பலரே; அறுவகைச் சுவையும் அளவில துய்த்து உறும்பல நோய்க்கே உறைவிட மாவார்; உண்ணவும்…

மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார்

மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் 1/6 “இளமையும் ஆர்வமும் ஏங்கிய உள்ளமும் தளர்ந்த நடையும் தனக்கே உரித்தாய் வேனிலில் அசைந்திடும் வெறும்கொம் பேபோல் வந்திடும் சிறுவர் வாட்டம் கூறாய்” எனவே வினவிட இளைஞனும் நிமிர்ந்தே                          …5 “அன்புடன் வினவும் ஐய! என் குறைதனைச் சொல்லக் கேண்மின்! துயர்மிக உடையேன்; பள்ளி இறுதிப் படிப்பினை முடித்துளேன்; முதல்வகுப் பினில்நான் முதன்மையன் பள்ளியில் ஆயினும் செய்வதென்; அப்பனும் அற்றேன்!                        …10 கல்லூ ரியில்நான் கற்றிட வழியிலை; உதவும் உற்றார் ஒருவரும் பெற்றிலேன்; செல்வரை…

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 16: ம. இராமச்சந்திரன்

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 15: தொடர்ச்சி) 16 மாணவர் ஆற்றுப்படையும் மற்றைய ஆற்றுப்படைகளும்   பத்துப்பட்டுள் கூறப்பெற்ற ஆற்றுப்படை நூல்கள் ஐந்தனுள் திருமுருகாற்றுப்படை மட்டும் சிறிது வேறுபட்ட தன்மையுடையது எனலாம். இறையருள் பெற்ற புலவன் ஒருவன், இறையருள் பெறச் செல்லும் புலவன் ஒருவனுக்கு, இறைவன் உறையும் இடங்கள், இறைவனைக் காணச் செல்லும் வழிகள், அடியவனை நோக்கி இறைவனே நாடிவந்து, காட்சி தந்து இன்பம் நல்கி இன்னருள் வழங்குகின்ற செய்திகளைக் கூறும் ஒப்பற்ற நூலாகும். மாணவர் ஆற்றுப்படையோ, வறுமை காரணமாக இளமையிற் கல்விச்…

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 09: ம. இராமச்சந்திரன்

(அகரமுதல 106   கார்த்திகை 06, 2046 / நவ. 22, 2015 தொடர்ச்சி)     இலக்குவனார் ஆசிரியராகப் பணியாற்றிய தொடக்கக் காலத்தில் குறுங்காவியம் ஒன்று பாடியுள்ளார். (குறிப்பு : ஆய்வாளர் கவனக்குறைவால் இவ்வாறு தெரிவித்துள்ளார். இவர் குறிப்பிடும் குறுங்காவியம் இலக்குவனார் புலவர் மாணாக்கராக இருந்த பொழுது எழுதப்பெற்றது.) இக்கதைப் பாடல் முழுவதும் அகவற் பாவால் எழுதப் பெற்று பதிப்பும் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். ஆயின் அக்கவிதை ஆய்வாளர் கைக்குக் கிட்டவில்லை.  தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை வெளியிட்டுள்ள ‘தமிழ் நூல் விவர அட்டவணையில் மேற்படி…

தமிழ்நலப் பகுத்தறிவுக் கவிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார் – 4: இலக்குவனார் திருவள்ளுவன்

  (அகரமுதல 95, ஆவணி 20, 2046 / செப்.06, 2015 தொடர்ச்சி)     4   ‘இராமன் ஆண்டால் என்ன, இராவணன் ஆண்டால் என்ன’ என்னும் தொடர் மக்கள் இடையே உலவினாலும் அதன் பொருள் யாருக்கும் புரிவதில்லை. உண்மையில் இவ்வரிகள் வால்மீகியால் இராமாயணத்தில் சொல்லப்பட்டதாகும். இராவணனின் எதிர்ப்பைச் சமாளிக்க இயலாமல் பின்வாங்கி ஓடும் வானரப் படையினர், தமக்குரியதல்லாத அயல்நாட்டை யார் ஆண்டால் நமக்கென்ன? நாம் ஏன் அயலவர் நாட்டுப் போரில் மாள வேண்டும் என்று நொந்து கூறியதாகும். இதனை, யார் ஆண்டால்…

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 15: ம. இராமச்சந்திரன்

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 14: தொடர்ச்சி) மாணவர் ஆற்றுப்படை   மாணவர் ஆற்றுப்படை என்னும் இக்கவியைப் பாடியவர் காலஞ் சென்ற பேராசிரியர் இலக்குவனார் ஆவர். செந்தமிழ்ப் பற்றும் நுண்மாண் நுழைபுலமும் நிரம்பப் பெற்றவர். தம் வாழ்க்கையைப் பெரிதெனக் கருதாதவர். தமிழ் மொழியின் வளர்ச்சியே தம்முடைய வாழ்வெனக் கருதி வாழ்ந்தவர். இடுக்கண் பல உற்ற போதும் எவர்க்கும் அஞ்சாது ஏறுபோல் வாழ்ந்து காட்டியவர். வறுமையிலும் வாய்மைநெறி போற்றிய செம்மல் அவர். பெரியார் ஈ.வே. ராமசாமியின் பகுத்தறிவுக் கொள்கையைப் பெரிதெனப் போற்றியவர். எழுத்திலும் பேச்சிலும்…