மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் 6/6

(மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் 5/6  தொடர்ச்சி) மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் 6/6 உண்மை கூறா உலகில் வாழ்வது அம்ம கொடிது; அன்றியும் மாணவ! சொல்வ தொன்று; செய்வ தொன்று வீட்டில் ஒன்று; வெளியில் ஒன்று;                              165 கண்டால் ஒன்று; சென்றால் ஒன்று; நேர்மையும் இன்று; நிலையும் இன்று; அழுக்கா றென்ற ஆழ்கடல் உண்டே; அவாவெனும் கொடிய அராவும் உண்டே; வெகுளி யென்ற வெந்தீ உண்டே                              170 இன்னாச் சொல்எனும் ஈட்டியும் உண்டே தன்னலம் என்ற தாக்கணங்…

மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் 5/6

(மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் 4/6 தொடர்ச்சி) மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் 5/6     ‘குறள்நெறி பரவின் குடியெலாம் சிறக்கும்                                    140 அமைதி நிலவும் அன்பு தவழும் போர்முறை ஒழியும்; பொய்மை மறையும் செம்மை ஆட்சி சீர்பெற் றோங்கும்’ என்றே கூறி இன்குறள் பாக்களை தெருவெலாம் பரப்பச் செய்யும் தொண்டில்                                 145 உளம்உரை உடல்பொருள் ஒல்லுவ வெல்லாம் அளித்திடக் காண்பாய் அகம்மிக மகிழத் திங்கள் தோறும் திருக்குறள் கழகக் கூட்டம் நடாத்தி நாட்டின் உயர்வைப் பெருக்கிடும்…

மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் 4/6

(மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் :3 / 6 தொடர்ச்சி)     மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் 4/6 அவர்கருத் தறிந்தே அன்பாய் ஒழுகும்                                               110 தம்பியும் மக்களும் தமரும் பெற்றவர். கோவிந்த சாமியாம் கூறும் தம்பி கொடுப்பதும் கொள்வதும் குறைமிக வின்றி அறநெறி போற்றிடும் அரிய வணிகர். புன்னகை தவழும் நன்னல முகத்தர்.                                                  115 அடக்கமே வடிவம்; அன்பே பண்பு அண்ணனுக் கேற்ற அருள்உளத் தம்பியர் உடலால் இருவர் உளத்தால் ஒருவர் பகுக்க முயல்வோர் பயன்பெறத்…