வண்ணத்துப்பூச்சி – சந்தர் சுப்பிரமணியன்
வண்ணத்துப்பூச்சி – சந்தர் சுப்பிரமணியன்
மண்ணில் வீழ்ந்த
மலரே மீண்டும்
மரத்தை அடைகிறதோ! – அட!
வண்ணப் பூச்சி
வந்தென் முன்னர்
வலம்தான் வருகிறதோ!
விண்வில் ஒடிந்து
விழுந்தொரு துண்டு
விரைந்து வருகிறதோ! – அட
வண்ணப் பூச்சி
வனப்பின் நிறந்தான்
வகையாய்த் தெரிகிறதோ!
தண்ணீர்ப் பரப்பில்
தகதக வென்றே
தங்கம் சொலிக்கிறதோ! – அட
வண்ணப் பூச்சி
வான்மண் எங்கும்
வரைந்து களிக்கிறதோ!
– இலக்கியவேள் சந்தர் சுப்பிரமணியன்
புன்னகைப் பூக்கள் பக்கம் 34
Leave a Reply