வண்ணப் படம் – சந்தர் சுப்பிரமணியன்
வண்ணப் படம்
வண்ணம் தெளித்து வரைகின்றேன்! – நான்
வரிசைப் பூக்கள் வரைகின்றேன்!
கண்கள் கூட வரைகின்றேன்! – அதில்
கருப்பாய் மணிநான் வரைகின்றேன்!
காட்டுப் புலிநான் வரைகின்றேன்! – அதன்
கரத்தில் நகங்கள் வரைகின்றேன்!
ஆட்டைப் பார்த்து வரைகின்றேன்! – உடன்
அருகம் புல்லும் வரைகின்றேன்!
கோட்டுப் படங்கள் வரைகின்றேன்! – ஒரு
கோவில் கூட வரைகின்றேன்!
வீட்டுச் சுவரில் மாட்டிவிட – நான்
விரைவாய் வரைந்து தருகின்றேன்!
– சந்தர் சுப்பிரமணியன்
புன்னகைப் பூக்கள் பக்கம் 29
Leave a Reply