savethamizhrefugees06
எதிர்வரும் சனி  ( 28.06.ஆனி 14, 2045 / 2014) மாலை 4:30 முதல் 8:30வரை பொதுக்கூட்டம்

இலங்கை இனப்படுகொலை அரசை நோக்கி ஏதிலியர் மீண்டும் திருப்பி அனுப்பப்படுகின்றனர்! உலகம் முழுவதும் அவலத்துள்ளும் அச்சத்துள்ளும் வாழும் ஈழத் தமிழ் ஏதிலியர் திட்டமிட்டு இலங்கையை நோக்கிக் கடத்தப்படுகின்றனர். மலேசியாவிலிருந்து  ஏதிலியராக ஏற்கப்பட்ட தமிழர்கள் கடத்தப்பட்டனர். பிரித்தானியா,பிரான்சு, செருமனி,கனடா போன்ற நாடுகளிலிருந்து ஆப்பிரிக்க நாடுகள் உட்பட உலகம் முழுவதும் வாழும் தமிழ்  ஏதிலியரின்  நிலை கேள்விகுறியாகியுள்ளது.

savethamizhrefugees02இவற்றைக் கண்டித்து தமிழ்  ஏதிலியருக்கான போராட்டக்குழு ஐக்கிய நாடுகளுக்கான ஏதிலியர் முகவர் நிலையத்தின் இலண்டன் கிளை முன்பாக  இரண்டு வாரங்களின் முன்னர் முற்றுகை ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

ஐக்கிய நாடுகள் நிறுவனம் இலங்கை அரசைப் போர்க்குற்றங்கள் புரிந்த அரசு என்கிறது. அதே நிறுவனத்தின்  ஏதியருக்கான முகவர் அமைப்பு போர்க்குற்ற அரசை நோக்கி தமிழர்களை அனுப்பி அழிக்க  உடன்படுகின்றது.

ஆக, இலங்கை அரசு உட்பட அதன் போர்க்குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்பட்டு பதவியிலிருந்து அகற்றப்பட வேண்டும் என்றும் அதுவரை  ஏதிலியர் தாம் விரும்பும் நாட்டில் வாழ  இசைவளிக்கப்பட வேண்டும் என்றும் கோரும் போராட்டத்தின் அடுத்த கட்டமாக இப் பொதுக்கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

பொதுக் கூட்டத்தில்  ஏதிலியரை ஏற்குமாறு கோரும் போராட்டத்தை எப்படி வெற்றியடையச் செய்வது என்பது savethamizhrefugees05தொடர்பான அடிப்படைச் செய்திகள் ஆராயப்படும்.

தவிர,  ஏதிலியருக்கான பொதுவான ஒத்துழைப்பு, ஏதிலியர் தொடர்பாக முழுமையான சமூகத்திலும் விழிப்புணர்வை ஏற்படுத்தல், தொடர்ச்சியான சமூக விழிப்புணர்வு,  கல்வி போன்றவற்றிற்கான வேலைத்திட்டங்கள் முன்வைக்கப்பட்டு ஆராயப்படும்.  ஏதிலியரை ஆதரிக்கும் ஏனைய பிரித்தானிய அமைப்புகள் போராட்டத்தை வலுவடையச் செய்தல் குறித்து தமது கருத்துக்களை முன்வைக்கும்.

தமிழ்ச் சமூகத்தின் இன்றைய இன்றைய அவலமான ஏதிலியரின் அவலத்தை எதிர்கொள்ள முனையும் இப் பொதுக்கூட்டத்தில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைக்கின்றோம்.

இரவு உணவிற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன

காலம் எதிர்வரும் சனி(28.06.2014) மாலை 4:30 இலிருந்து 8:30 வரை

இடம்:  Shiraz Mirza Community Hall, 76A Coombe Road, Norbiton, Kingston Upon Thames. KT2 7AZ, (நோர்பிட்டன்  தொடர்வண்டி நிலையத்திற்கு  அருகில்)

தொடர்புகள் : savetamilrefugees@gmail.com

-தமிழ்  ஏதிலியருக்கான போராட்ட அமைப்புக்குழு

savethamizhrefugees01 savethamizhrefugees04 savethamizhrefugees02