அபுதாபியில் நடைபெற்ற மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி
அபுதாபியில் நடைபெற்ற மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி
அபுதாபி அரோரா நிகழ்வுகள் வளாகத்தில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி ‘ஆரோக்கியமென்ற செல்வம்’ என்ற தலைப்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியினை மார்பகப் புற்றுநோய்ச் சிறப்பு வல்லுநர் மருத்துவர் ஆர்த்தி சிராலி தொடங்கி வைத்து உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல முதன்மை, அரிய தகவல்களை விவரித்தார். இதற்காக அவர் சிறப்புக் காணுரைக்காட்சி ஒன்றினையும் ஏற்பாடு செய்திருந்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தாய்மார்களின் கேள்விகளுக்கு விரிவாக விளக்கமளித்தார்.
அதனைத் தொடர்ந்து நலமான வாழ்வுக்கு ஓகாவின் முதன்மையை தமிழகத்தைச் சேர்ந்த ஓகப்பயிற்சியாளர் இந்துமதி மாதவு செய்முறை பயிற்சியின் மூலம் விவரித்தார்.
இவர் கடந்த 10 ஆண்டுகளாக ஓகப் பயிற்சியினை மக்களுக்குச் சொல்லிக் கொடுத்து வருகிறார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழகம் முதலான பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர். அவர்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்ற தம் விருப்பத்தையும் தெரிவித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்துமதி மாதவு ஓகைக் குழுவினர் சிறப்புடன் செய்திருந்தனர்.
(படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.)
இந்துமதி பாலசுப்பிரமணியன் <mkindu@hotmail.com>
தரவு : முதுவை இதாயத்து
Leave a Reply