ஆட்சியருக்குப் பாதி-மாவட்டக் கண்காணிப்பாளருக்குப் பாதி ??? !!!
நாகப்பட்டினம் மாவட்டத்தில்
ஆட்சியருக்குப் பாதி!!!???
மாவட்டக் கண்காணிப்பாளருக்குப் பாதி ??? !!!
நாகப்பட்டினம் மாவட்டத்தில் காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரிவதாகக் கூறும் சம்பந்தம் என்பவர் 94981-65053 என்ற அலைபேசியில் இருந்து தொடர்பு கொண்டு இடர்ப்பாட்டில் உள்ளவர்களைக் கண்டறிந்து உரூ.2 இலட்சம் வாங்குவதும், தரமறுப்பவர்களை மிரட்டுவதும் என மோசடி செய்து வாழ்ந்து வருகிறார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் மகளிர் காவல்நிலையங்களில் மணக்கொடை(வரதட்சணை) வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இதில் 5 அல்லது 10க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அதில் 2 அல்லது 3 ஆட்களை மட்டும் கைது செய்துவிடுவார்கள். மற்றவர்கள் வெளிநாடுகளான சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற நாடுகளில் இருப்பார்கள் அல்லது தலைமறைவாக இருந்து முன் பிணை வாங்குவார்கள்.
திட்டச்சேரி காவலர் குடியிருப்பில் இருக்கும் சம்பந்தம் என்பவர் இந்த மாதிரியான வழக்குகளைக் கண்டறிந்து அரசு முத்திரையுடன் கூடிய ஒரு வெள்ளைத்தாளில் தட்டச்சிட்டு தொடர்புடையவர்களை 94981-65063 என்ற அலைபேசி எண்ணில் இருந்து தொடர்பு கொண்டு உங்கள் வழக்கு தொடர்பாகப் பேசவேண்டும் எனக்கூறி, “உங்கள் வழக்குகளை நான் பார்த்துக்கொள்கிறேன். இதற்கு நீங்கள் உரூ 2இலட்சம் தரவேண்டும்” எனக் கட்டாயப்படுத்தி வாங்கி வருகிறார். தராதவர்கள் மீது, “உங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என மிரட்டிப் பணத்தை வாங்கிவிடுவாராம். பணம் கேட்கும்பொழுது இந்தப்பணம் மாவட்ட ஆட்சியருக்கும், மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளருக்கும் போய்ச்சேருகிறது. இதில் எனக்கு வெறும் 5,000 உரூபாய்தான் கிடைக்கும் எனக்கூறிப் பெறுகிறாராம். இவரால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் உள்ளனர். இவர்மீது புகார் கொடுத்தால் நரம்புத்தளர்ச்சி நோய் உள்ளது. நடவடிக்கை எடுத்தால் உயிர்போய்விடும் என்ற மாயை ஏற்படுத்தி உள்ளாராம். இதனால் யாரும் நடவடிக்கை எடுப்பதில்லையா அல்லது மோசடியில் வேறு சிலருக்கும் பங்கு உண்டா எனத் தெரியவில்லை..
இந்த மோசடிப்பேர்வழி மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் உண்மையாகவே காவல்துறை கண்காணிப்பாளருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் பணம் செல்கிறது என மக்கள் நம்புவர். அவ்வாறில்லாமல் அவர்கள் பெயரைக்கூறி இவர் பணம் பெறுகிறார் என்பதை மெய்ப்பிக்கக் காவல்துறையினர் இவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுத்து இம்மோசடிக்கு முற்றுப்புள்ளியிட வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் இப்பகுதி மக்கள்.
உண்மை செய்தியை உலகிற்கு எடுத்துரைத்த அகர முதல இணையத் தளத்திற்கும் நெஞ்சைப் பிளப்பினும் உண்மையை உலகிற்கு எடுத்துரைப்பேன் எனச் செயலாற்றிக் கொண்டு இருக்கும் ஆசியருக்கும் கட்டுரையாளருக்கும் நன்றி.
இந்த செய்தி முற்றிலும் உண்மையே! சம்பந்தபட்ட காவல் துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்