ஆயி மண்டபத்தைச் சீரமைத்திட

விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுமா?

 

  ஆயி மண்டபம் என்பது புதுச்சேரி மாநில அரசின் சின்னமாகத் திகழ்கிற மண்டபமாகும். இது புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகை எதிரில் உள்ள  பாரதி பூங்காவில் அமைந்துள்ளது.

   இந்த ஆயி மண்டப முகப்பில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு காரை விழுந்து சேதமடைந்ததால் சரிசெய்ய  பாெதுப்பணித்துறை முயற்சி மேற்கொண்டது. ஒப்பந்தக்காரர் மூலம் பணிகள் மேம்போக்காக அரைகுறையாகச் செய்யப்பட்டதன் விளைவாக ஒட்டப்பட்ட காரை மீண்டும் பெயர்ந்து விழுந்தது. இதற்குச் செலவிடப்பட்ட தொகை எவ்வளவு என்று தெரியவில்லை.

   தற்சமயம் மண்டபத்திலுள்ள பெண் சிலைகளின் சிலைகளின் முகம் சிதைந்த நிலையில் உள்ளது.

  பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து பார்க்கும் பாரதி பூங்காவின் மையத்தில் அமைந்துள்ள ஆயி மண்டபத்தைச் சீரமைத்திட விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுமா?

 

– து.கீதநாதன்

சுதந்திரம்

மலர் 85 : இதழ் 1

ஆகத்து 03, 2018