திருக்குறளுக்குப் பன்னாட்டு ஏற்பு

          இங்கிலாந்து நாட்டில் அனைத்துலகத் திருக்குறள் மாநாடு

    இங்கிலாந்து நாட்டின்  (இ)லிவர்பூல்  பகுதியில் அமைந்துள்ள பன்னாட்டுப் புகழ் பெற்ற ஓப்பு (நம்பிக்கை) பல்கலைக்கழகத்தில்(Liverpool Hope University) அடுத்த ஆண்டு (2018) ஆனி 13, 14, & 15 , 2049 / 27,28,29-06.2018  ஆகிய நாட்களில் இரண்டாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு நடைபெறவுள்ளது.

   நாகர்கோவிலில் கடந்த மே-மாதத்தில் நடைபெற்ற முதல் அனைத்துலகத் திருக்குறள் மாநாட்டின் தொடர்ச்சியாக இரண்டாவது மாநாடு (இ)லிவர்பூலில்  நடை பெறுகின்றது.

  தமிழக எல்லைகளுக்கு அப்பால் திருக்குறள் (Thirukkural beyond the Frontiers of Tamil India) என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நடக்கும் இம்மாநாட்டில் இந்திய நாட்டுப் பேராளர்களோடு அமெரிக்க, ஐரோப்பிய, ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளைச் சார்ந்த ஏராளமான அறிஞர்கள் பங்கேற்று ஆய்வுரை வழங்க உள்ளனர். காட்டுலாந்த்து நாட்டைச் சார்ந்த தமிழ்ப் பேரறிஞர் ஆசர், உ ருசியா நாட்டைச் சார்ந்த பேராசிரியர் அலெக்சாண்டர்  துபியான்சுகி,   ஆங்காங்கு நாட்டைச் சார்ந்த பேராசிரியர்  கிரகோரி   சேம்சு, தென்கொரிய நாட்டைச் சார்ந்த பேராசிரியர் யாங்கிமூன், மலேசிய நாட்டைச் சார்ந்த பேராசிரியர்  தத்தோ.  தென்னிசன்  செயசூரியா, இலங்கை  நாட்டைச் சார்ந்த பேராசிரியர். சண்முகதாசு ஆகியோர் இம்மாநாட்டுப் பேராளர்களில் குறிப்பிடத்தக்கோராவர். 25க்கும் மேற்பட்ட நாடுகளைச் சார்ந்த அறிஞர்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர். இம்மாநாட்டினைத் தொடர்ந்து இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுலா வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட உள்ளன.

   திருக்குறளுக்கு உலகப்பொதுநூல் (The Book of the World) என்னும் தகுதிப்பாட்டினை ஐ.நா.வின் கல்விஅறிவியல்-பண்பாட்டு(UNESCO) அமைப்பு, மூலம் பெற்றுத்தரும் குறிக்கோளினை மனத்திற் கொண்டு நடத்தப்படும் இம்மாநாட்டைச் சென்னையிலுள்ள ஆசியவியல் நிறுவனம், இங்கிலாந்திலுள்ள (இ)லிவர்பூல் ஓப்பு பல்கலைக்கழகம், மொரிசியசு நாட்டிலுள்ள புலம் பெயர்ந்து வாழும் அனைத்துலகத் தமிழர் மையம் (INTAD), தமிழ் ஒன்றியம் (Tamil League), அமெரிக்க நாட்டின் இல்லினாய்சு மாநிலத்தில் அமைந்துள்ள அனைத்துலகத் தமிழ் மொழி, பண்பாட்டு ஆய்வு நிறுவனம் போன்ற பல்வேறு அமைப்புகள் இணைந்து நடத்த உள்ளன. இதனைத் தொடர்ந்து திருக்குறள் உலக மாநாடு (Global Conference) பிரான்சு நாட்டில் ஐ.நா.வின் கல்வி அறிவியல்ப ண்பாட்டு(UNESCO) அமைப்பு நிறுவன வளாகத்தில் ஆடி 22, 23, 2051  / 6, 7– 08-2020 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது.

   இங்கிலாந்து நாட்டில் நடைபெறும் அனைத்துலகத் திருக்குறள் மாநாட்டில் பங்கேற்க விழைபவர்கள் கீழ்க் காணும் முகவரிக்குத் தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.

இயக்குர்,

 ஆசியவியல் நிறுவனம்

 செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர்

 சென்னை – 600 119

 மின்னஞ்சல்:    info@instituteofasianstudies.com

 தொலைபேசி:   24500831, 24501851

  பேசி:             9840526834

 இணையத்தளம்:  www.instituteofasianstudies.com

[ Dr.G.John Samuel,
Founder Director and Secretary
INSTITUTE OF ASIAN STUDIES
Chemmencherry, Shollinganallur P.O 
Chennai -600 119
Mobile: 9840526834
Website: www.instituteofasianstudies.com ]