52paramakudi_sirumikkuuthavi

இசுலாமிய இளைஞர்கள்

இந்துச்சிறுமிக்கு மருத்துவ உதவி

பரமக்குடியில் கண் குறைபாடு கொண்ட இந்து சமயத்தைச் சார்ந்த சிறுமியின் மருத்துவத்திற்குக் கீழப்பள்ளிவாசல் இசுலாமிய இளைஞர்கள் நிதியுதவி திரட்டி வழங்கினர்.

இன்று மாலை கீழப்பள்ளிவாசலில் இந்நிகழ்வு நடைபெற்றது.

கீழப்பள்ளிவாசல் தலைவர் எசு.என்.எம். முகம்மது யாக்கூப், எமனேசுவரம் காவல் நிலையத் துணை ஆய்வாளர், ஆசிரியர் எம்.பெரோசுகான், ஆசிரியர் க.இதாயத்துல்லா, அசுலம், சியாவுல் ஆகியோர் கலந்து கொண்டனர். காவல்துறை துணை ஆய்வாளர் நிதியுதவியை வழங்கினார். சமயச் சார்பற்ற உண்மையான உதவியை அனைவரும் பாராட்டினர்.

தரவு : முதுவை இதாயத்து