இனப்படுகொலையில் இந்தியாவின் பங்கு! மக்கள்தீர்ப்பாயத்தில் மே17 இயக்கத்தின் சான்றாவணங்கள்!
ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து, செருமனியில் பிரமென் நகரில் நிலையான மக்கள் தீர்ப்பாயம் திசம்பர் 7 முதல் 10 வரை உசாவல் நடத்தியது.
ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் தென்னிசு ஏலிடே தலைமையிலான அத் தீர்ப்பாயத்தில் பன்னாட்டுச் சட்ட சட்ட வல்லுநர்கள், இனப் படுகொலை வழக்குகள் தொடர்பான வழக்குரைஞர்கள், பேராசிரியர்கள் முதலான பலரும் இடம்பெற்றிருந்தனர்.
இத்தீர்ப்பாயத்தில் ஈழத்தில் நடைபெற்றது இனப்படுகொலை என்றும் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் உதவியுடன் சிங்கள அரசு இனப்படுகொலையை நிகழ்த்தி உள்ளது என்றும், விடுதலைப்புலிகள் அமைப்பைப் ‘பயங்கரவாத அமைப்பு’ என முத்திரை குத்தக்கூடாது என்றும் ஒரு காலத்தில் பயங்கரவாதியாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நெல்சன் மண்டேலா விடுதலைப் போராளி என்றால் விடுதலைப்புலிகள் இயக்கத்தினரும் விடுதலைப்போராளிகள்தாம் என்றும் இத் தீர்ப்பாயம் அறிவித்து இருந்தது. (வைகோ அறிக்கை மூலம் முந்தைய இதழில் ‘அகர முதல’ இவற்றைத் தெரிவித்துள்ளது.)
இது தொடர்பில் 21.12.13 சனிக்கிழமையன்று தில்லி செய்தியாளர் மன்றத்தில் மே 17 அமைப்பின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி சில தகவல்களைத் தெரிவித்தார். அப்பொழுது, ஈழத்தில் நடைபெற்ற இனப் படுகொலையை இந்தியா எவ்வாறு முன்னின்று நடத்தியது என்பதற்கான ஆதாரங்களை மே 17 இயக்கம் சார்பில் அளித்ததாகக் குறிப்பிட்டார்.
ஈழத்தில் தமிழின அழிப்புக் கொடுமைகளுக்கு இந்தியா ஆயுத உதவி செய்தது, இலங்கைக் படையினருக்குப் பயிற்சி அளித்தது, தமிழர்களுக்கு எதிரான போரில் தலையிடாமல் இருப்பதற்காகப் பன்னாட்டு நாடுகளுக்கு இந்தியா நெருக்குதல் கொடுத்தது, ஐ.நா.வில் உள்ள இந்திய அதிகாரிகள் உதவியுடன் இலங்கையில் இனப் படுகொலை நடப்பதற்கான சூழ்நிலையை உருவாக்கியது முதலான பல்வேறு தகவல்களுடன் கூடிய ஆதாரங்களை அளித்ததாகக் குறிப்பிட்டார். இந்தியாவின் மூன்று மிக முதன்மையான உயர் அதிகாரிகள், அமைச்சர்கள் தமிழர்களுக்கு எதிரான போரை முன்னின்று வழிநடத்திச் சென்றனர் என்பதற்கான ஆதாரங்களையும் அளித்ததாகத் தெரிவித்தார்.
இப்பங்களிப்பாலும், மக்கள்தீர்ப்பாயம், “இலங்கையில் நடைபெற்றது போர்க் குற்றமல்ல; அது ஒரு திட்டமிட்ட இனப் படுகொலை. இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஒத்துழைப்பும் உதவியும் இல்லாமல் இப் படுகொலை நடந்திருக்க முடியாது இப் போரின்போது தமிழ் இன மக்கள் கொல்லப்படுவார்கள் என்பதை அறிந்தே இலங்கைக்கு இந்த மூன்று நாடுகளும் உதவியுள்ளன. அத் தீர்ப்பில் படுகொலை செய்யப்பட்டவர்கள் ஈழத் தமிழர்கள்; அவர்கள் இலங்கையின் தேசிய இனத்தினர்”என்று தீர்ப்பு வழங்க முடிந்தது என்றார் அவர்.
“தேசிய இனங்கள் பிரிந்து போவதற்கான உரிமையை ஐ.நா. வழங்குகிறது. அதன்படி, ஈழத் தமிழர்கள் எதிர்காலத்தில் தனி நாடு அமைப்பதற்கான உரிமைக்கு மக்கள் தீர்ப்பாயம் அளித்துள்ள இத் தீர்ப்பு முதன்மையானதாக இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம்.”
“இனப் படுகொலை நடைபெற்ற பிறகும் இந்தியாவின் பங்களிப்பு தொடர்கிறது. அங்குள்ள பெண்களுக்கு கட்டாயக் கருத்தடை செய்வது, தமிழர்களின் நிலத்தைக் கவருவது, உளவியல் முறையில் துன்புறுத்துவது முதலியவற்றை இங்கை அரசு தொடர்ந்து நடத்திவருகிறது. அதனால்தான், ஈழத் தமிழர்களுக்கு எதிரான படைத்துறை நடவடிக்கையாக, போர்க்குற்றமாக மட்டும் அதைப் பார்க்காமல், இன அழிப்பு நடவடிக்கைக் குற்றமாகப் பார்த்து, பன்னாட்டு உசாவல் நடத்த வலியுறுத்துகிறோம்” என்றும் திருமுருகன் காந்தி தெரிவித்தார்.
நடுநிலையோடு தீர்ப்பு வழங்கிய மக்கள்தீர்ப்பாயத்திற்கும் பங்கேற்ற சட்ட வல்லுநர்கள், கருத்தாளர்களுக்கும்
India is not responsible… It is Congress….
இந்தியா என்பது இந்திய அரசையும் இந்திய அரசின் ஆளும் பொறுப்பில் உள்ள பேராயக்கட்சியையும்தான் குறிக்கும். தமிழில் தட்டச்சிட முயலுங்கள். பதிவிற்கு நன்றி. ஆசிரியர்