இரண்டாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு, இங்கிலாந்து
ஆனி 13-15, 2049 / 27 – 29.06. 2018
ஓப்பு (நம்பிக்கை) பல்கலைக்கழகம்(Liverpool Hope University)
இங்கிலாந்து
இரண்டாவது அனைத்துலகத்
திருக்குறள் மாநாடு
SECOND INTERNATIONAL CONFERENCE ON
THIRUKKURAL AS AN ETHICAL CORPUS OF UNIVERSAL APPEAL
கருப்பொருள்:
தமிழ் இந்தியாவின் எல்லை கடந்த திருக்குறள்
ThirukkuRal beyond the frontiers of Tamil India
கருத்தரங்கத் தலைப்புகள் (வரிசை எண் ங எழுத்திலிருந்து தொடங்கப்பெற்றுள்ளது)
ங.திருக்குறளும் அறநெறி இலக்கியத்தின் தொடக்கத் தொகுப்பும்
- திருக்குறள் மீதான சிறப்புப் பார்வையிலான அறிவுரை இலக்கியத்தின் படிநிலை வளர்ச்சி
- திருக்குறளும் தொடக் க ஈபுரு இலக்கியமும்
- திருக்குறளும் தொடக்கச் சீன இலக்கியமும்
- திருக்குறளும் எசியோடுவின் படைப்புகளும்
- திருவள்ளுவர், பிளேட்டோவிற்கும் அரித்தாதிலுக்கும் ஒப்புநோக்கத்தக்கவரா?
- திருக்குறளும் நடுமெய்மைக்கோட்பாடும்
- திருக்குறளும் சமற்கிருதத் தொடக் க அறநெறிப் படைப்புகளும்
- திருக்குறளும் புத்த நெறிமுறைகளும்
- திருக்குறளும் சமண நெறிமுறைகளும்
- திருக்குறளும் ஆசிவக மெய்யிறல் நெறிமுறைகளும்
- திருக்குறளும் கிறித்துவ நெறிமுறைகளும்
- திருக்குறளும் இசுலாமிய நெறிமுறைகளும்
- திருக்குறளும் சங்கக்கால நெறிமுறைகளும்
- பிற தமிழ்இலக்கிய அறநெறிப்படைப்புகள் பார்வையில் திருக்குறள்
- திருவள்ளுவரும் வேமனாவும் – ஒப்பீட்டு ஆய்வு
- திருவள்ளுவரும் கன்னட அறநெறிப்படைப்புகளும்
- திருக்குறள் தமிழர்களின் புனிதநூல்
- திருக்குறள் நோக்கில் அன்பே அண்டத்தின் தலையாயக் கோட்பாடு
ஙா. மொழிபெயர்ப்பில் திருக்குறள்
1.திருக்குறளும் ஐரோப்பியச் சமயப்பரப்புநர்களும்
- ஐரோப்பிய மொழிகளில் திருக்குறள்
- (இந்தியா தவிர்த்த) ஆசியமொழிகளில் திருக்குறள்
- இந்திய மொழிகளில் திருக்குறள்
- திருக்குறளை மொழிபெயர்க்கும்பொழுது நேரும் சிக்கல்கள்
ஙி. திருக்குறளும் பிற துறைகளும்
- திருக்குறளும் வணிகவியலும்
- திருக்குறளும் அரசியலும்
- திருக்குறளும் கல்வியியலும்
- திருக்குறளும் அறம்சார் விழுமியங்களும்
- திருக்குறளும் மருத்துவஇயலும்
- திருக்குறளும் தலைமைத்துவப்பண்புகளும்
ஙீ. திருக்குறளும் வரலாற்று ஆய்வுகளும்
- இடைக்காலத் தமிழ் இலக்கியத்தில் திருக்குறளின் செல்வாக்கு.
- இக்காலத் தமிழ் இலக்கியத்தில் திருக்குறளின் செல்வாக்கு.
- உலக இலக்கியத்தில் திருக்குறளின் செல்வாக்கு.
- திருக்குறளும் ஆல்பர்ட்டு சுவைட்சரும்
- திருக்குறளும் மகாத்மா காந்தியும்
- திருக்குறளும் இந்தியக் குமுகாயச் சீர்திருத்தவாதிகளும்
- திருக்குறளும் குமுகாய நீதியும்
- திருவள்ளுமாலைப் புலவர்கள் கண்ணோட்டத்தில் திருக்குறள்
- திருக்குறளும் உரையாசிரியர்களும்
- திருவள்ளுவர் பிறப்பிடம்
- திருவள்ளுவர் காலம்
ஙீ. திருக்குறளும் இக்கால மன்பதையும்
- திருக்குறள் உணர்த்தும் சீர்மிகு வாழ்க்கை
- இக்காலக் குமுகாயத்திற்குப் பொருந்தும் திருக்குறள்
- திருக்குறளின் ஞாலப்பார்வை அல்லது பேரண்ட நோக்கு
- வருங்காலத்திற்கேற்ற திருக்குறள் தாக்கம்
- திருக்குறளில் காட்சிப்படுத்தப்படும் சான்றோன் , ஒப்புநோக்கு
ஙூ இலக்கியத் தகைமை
1.திருக்குறளின் இலக்கிய விழுமியம்
- திருக்குறளின் செய்யுள் நடை
- திருக்குறள் வெண்பா யாப்பு
- திருக்குறளும் கடவுளும்
- திருக்குறளும் பாலியல் காதல் குறித்த இலக்கியத் தொகுப்பும்
கட்டுரைச்சுருக்கம் : தை 02, 2049 – சனவரி 15, 2018
ஆய்வுத்தாள் அனுப்ப வேண்டிய இறுதி நாள் : மாசி 16, 2049 – 28.02.2018
ஆய்வுத்தாள் பக்க அளவு :10 இலிருந்து 15 வரை
ஆய்வுத்தாள் அச்சுப்படியாகவும் கணிணிப்படியாகவும் அனுப்பப் பெற வேண்டும்.
ஆங்கிலத் தலைப்பு முதலான மாநாட்டின் முழு விவரம் அறிய
பயண ஏற்பாட்டாளர் விவரம்
சென்னை பயணம்-சுற்றுலா தனி நிறுவனம்
Madras Travels and Tours Pvt. Ltd., வேளச்சேரி, சென்னை
தொலைபேசி + 91+ 44 22554797 ; 42022244
மின்வரி vatsala@madrastravels.com
தளம் www.madrastravels. com
கருத்தரங்கச் செயலகம்
இயக்குநர்,
ஆசியவியல் நிறுவனம்
செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர்
சென்னை – 600 119
மின்னஞ்சல்: info@instituteofasianstudies.com
தொலைபேசி: 24500831, 24501851
பேசி: 9840526834
இணையத்தளம்: www.instituteofasianstudies.com
Leave a Reply