மாணிக்கவாசகம் பள்ளி, பரிசு ; manickavasakampalli_parisu

மாணிக்கவாசகம் பள்ளியில்

ஓவியம், ஒப்புவித்தல் போட்டிகளில்

முதலிடம் பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு 

 

  தேவகோட்டை- தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு  உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் போட்டிகளில் வெற்றி பெற்று பரிசு பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டியிட்டு முதலிடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

   நிகழ்ச்சிக்கு வந்தவர்களை மாணவர் இராசேசு வரவேற்றார்.

  பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.

  தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், தேவகோட்டை கிளையின் சார்பாக நடைபெற்ற ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்று  முதல் பரிசு, சான்றிதழ் பெற்ற மாணவி இராசேசுவரிக்கும், ஏறத்தாழ300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற ஓவியப் போட்டியில் முதல் இடம்   வென்று   சான்றிதழ், பரிசு பெற்ற  மாணவர் கிசோர்குமாருக்கும், மூன்றாம் இடம் பெற்ற (இ)யோசேக்கும், சிறப்புப் பரிசுகள் பெற்ற மாணவர்கள் முத்தையன், ஜெயசிரீ, அம்முசிரீ, தனுதர்சினி, கார்த்திகேயன், செனிபர் ஆகியோருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

 சிவகங்கை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சார்பாக நடைபெற்ற பாரதி விழா போட்டியிலும் இப்பள்ளி மாணவி இராசேசுவரி முதலிடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  போட்டிகளில் பங்கு பெற பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும், போட்டிகளுக்கும், பரிசளிப்பு விழாவிற்கும் விடுமுறை நாளன்று அழைத்து சென்ற ஆசிரியர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

  நிறைவாக மாணவி காயத்திரி நன்றி கூறினார்.