SRM-thamizhpperayam01

தமிழன்பருக்கு, வணக்கம்.

கணிணித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும் –  சான்றிதழ்ப் படிப்பு
Certificate Course in  Fundamentals & Use of Tamil Computing

சித்திரை 21 – வைகாசி 15, 2046 / 04.05.15 – 29.05.15

 எனும் ஒருமாதகாலச் சான்றிதழ்ப் பயிற்சி வகுப்பு மே மாதம் தி.இ.நி./ SRM பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயக் கணிணித்தமிழ்க் கல்வித்துறையில் நடைபெறவுள்ளது.

 கணிணியின் அடிப்படையையும் செயல்பாட்டையும் தெரிந்துகொண்டு  அனைவரும் கணிணியில் தமிழைப் பயன்படுத்துவதற்கும் ஆய்வு செய்வதற்கும் தமிழ்மென்பொருள் உருவாக்குவதற்கான அடிப்படை ஆய்வுப் பணிகளை அறிந்து கொள்வதற்கும் இணையத்தமிழ்ப் பயன்பாட்டினைப் புரிந்துகொள்வதற்கும் பயிற்சியிக்கப்படுகிறது.

  இந்தப் பயிற்சியின் வாயிலாக ஊடகத்துறையில் பணிவாய்ப்புகள் பெறமுடியும்.

பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் என அனைவரும் பயன்பெறும் வகையில் பருவ விடுமுறையில் நடைபெற உள்ளது.

 பணி ஓய்வு பெற்றவர்களும் இல்லத்தரசிகளும் பங்குபெறலாம்.

வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளி வரை 20 நாட்கள் காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை நடைபெறும்.

கல்வித் தகுதி:  குறைந்தது 10- ம் வகுப்பில் தேர்ச்சி. அகவை வரம்பு இல்லை.

மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தை http://www.srmuniv.ac.in எனும் இணையத்தளத்திலும் தமிழ்ப்பேராய அலுவலகத்திலும் பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பத்தைப் படி எடுத்தும் பயன்படுத்தலாம்.

பயிற்சிக் கட்டணம் உரூபாய் 1000/- (ஆயிரம்)-த்திற்கான வரைவோலையை(DD) ‘SRM TAMIL PERAYAM’ என்னும் பெயரில் சென்னையில் மாற்றத்தக்கதாக எடுத்து விண்ணப்பத்துடன் இணைக்கவேண்டும்.

நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் வந்துசேரவேண்டிய

கடைசி நாள் : சித்திரை 12, 2046 – 25.04.2015, சனிக்கிழமை.

 

நண்பர்களுக்கு இதனைத் தெரியப்படுத்தி பயன்பெறச் செய்யுங்கள்.

தகவல்: முதுவை இதாயத்து