‘செம்மொழியின் செழுமைக்குத் திரைத்துறையின் பங்கு’ -இலக்கியவீதி நிகழ்வு
அன்புடையீர்!
வணக்கம் .
இவ்வாண்டு
இலக்கியவீதியின் 41 ஆம் ஆண்டுத் தொடக்க விழா என்பதைப் பெரு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இலக்கியவீதியும் சிரீ கிருட்டிணா இனிப்புகள் நிறுவனமும் இணைந்து நடத்தும்
‘கலைகளால் செழிக்கும் செம்மொழி’
என்கிற தொடரின், இந்த ஆண்டுக்கான ஆறாம் நிகழ்விற்கு உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
ஆனி 27, 2048 / 11.07.2017. செவ்வாயன்று
மாலை 06.30 மணிக்கு
மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில்
‘செம்மொழியின் செழுமைக்குத் திரைத்துறையின் பங்கு’
என்கிற நிகழ்ச்சி நடைபெறுகிறது. –
வாழ்த்துரை : கிருட்டிணா இனிப்பகத்தின் திரு ம.முரளி
தலைமை : இயக்குநர் எசு.பி. முத்துராமன்
முன்னிலை : இலக்கியவீதி இனியவன்
சிறப்புரை : நடிப்புக் கலைஞர் இராசேசு
அன்னம் விருது பெறுபவர் : கவிஞர் பழநிபாரதி
நிரலுரை : திரு துரை இலட்சுமிபதி
தகுதியுரை : செல்வி . ப. யாழினி
உறவும் நட்புமாக வருகை தந்து நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுகிறேன்.
என்றென்றும் அன்புடன்
இலக்கியவீதி இனியவன்.
Leave a Reply