தமிழக அரசின் வரிவிதிப்பில்லா மிகை வரவு நிதிநிலை அறிக்கை
திட்டச் செலவு 42 ஆயிரத்து 185 கோடி
இலவசங்களுக்கு மட்டும் 48 ஆயிரம் கோடி
அரசின் மதுவகை விற்பனை இலக்கு
2014-15 இல், (23 ஆயிரம் கோடி உரூபாயில் இருந்து)26 ஆயிரம் கோடி உரூபாயாக உயரும்.
தமிழக அரசின் 2013 – 2014ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை 13.02.14 அன்று சட்ட மன்றத்தில் தமிழகநிதியமைச்சர் பன்னீர்செல்வம் முன்வைத்தார். அவர் தெரிவித்த அறிவிப்புகள் சில:-
. திட்டச் செலவினம் 170 ஆயிரம் கோடியை மிஞ்சும்.
ஊர்ப்புற வாழ்வாதாரத் திட்டத்திற்கு 253 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
24 ஆயிரத்து 503 காவல் துறையில் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
தமிழ் நாடு சிறப்புப் படைக்கு இதுவரை 10 ஆயிரத்து 99 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
44 புதிய போக்குவரத்து காவல் நிலையங்கள் அமைக்கப்படும்.
சிறையில் உள்ள தொழில் கூடங்கள் மேம்பாட்டுக்கு உரூ. 5 கோடி
* சாலை பாதுகாப்புக்கு உரூ.65 கோடி
காவல் துறையின் வளர்ச்சிக்கு உரூ.5,186. 20 கோடி உயர்த்தி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆதரவற்றோருக்கு 62 புதிய காப்பிடங்கள் அமைக்கப்படும்.
தீயணைப்புத் துறைக்கு உரூ.189. 65 கோடி ஒதுக்கீடு
ஆயிரம் புதிய பேருந்துகள் விடப்படும்
118 புதிய தொடக்க நலவாழ்வு மையங்களை அமைக்கவும், 64 தொடக்க நலவாழ்வு மையங்களை முப்பது படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகளாகத்தரம் உயர்த்தவும் அரசு முடிவு செய்துள்ளது. தேசிய ஊரக நலவாழ்வு இயக்கத்தின் மூலம், சென்னை மாநகராட்சியில் 20 புதிய நகர்ப்புற தொடக்க நலவாழ்வு மையங்கள் அமைக்கப்படும். மற்ற ஒன்பது மாநகராட்சிகளிலும் 77 நகராட்சிகளிலும், 37 புதிய நகர்ப்புற தொடக்க நலவாழ்வு மையங்கள் அமைக்கப்படும்.
உயர்நிலை மருத்துவ வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கத்தோடு, 300 கோடி ரூபாய் செலவில் நவீன விபத்து சிகிச்சை மையங்களுடன் கூடிய இரண்டு சிறப்பு பன்நோக்கு மருத்துவமனைகளை தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலியில் இந்த அரசு அமைக்கும். அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிறப்புப் பிரிவுகளுக்கான ஒரு புதிய பலமாடிக் கட்டடம் 75 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும். 14 கோடி ரூபாய் செலவில் நவீன கருவிகள் வழங்கப்பட்டு சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனை மேம்படுத்தப்படும். மேலும், இம்மருத்துவமனையில் ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனத்தின் உதவியுடன் 91 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக புறநோயாளிகளுக்கான வசதிகள் அமைக்கப்படும்.
Leave a Reply