vaiko-prison01

விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் வைகோ அருப்புக்கோட்டை நெசவாளர்  குடியிருப்பு, புதிய பேருந்து நிலையம், அண்ணாசிலை, இராமசாமிபுரம், காமராசர் சிலை, நேரு  திடல், பாவடி தோப்பு  முதலான பல இடங்களில் பம்பரம் சின்னத்திற்கு வாக்கு கேட்டு  பரப்புரை ஆற்றினார்.

அப்போது அவர் பேசியபோது,   ‘’தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க., கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்து தமிழக மக்களை ஏமாற்றி வந்துள்ளனர். இந்த  நாடாளுமன்றத் தேர்தலில் மாற்றுக் கூட்டணியாக தேசிய சனநாயகக் கூட்டணி வந்துள்ளது. தமிழக மக்களுக்காக நான் 27 முறை போராடிச் சிறைக்குச் சென்றுள்ளேன்.

தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய முல்லை பெரியாறு, காவேரி, பாலாறு, மற்றும் மீனவர்கள்  சிக்கல்கள் தீர நரேந்திர மோடி- தலைமையாளராக -பிரதமராக வரவேண்டும். நமது தொகுதியில் புதிய வாக்காளர்கள் அனைவரும் தி.மு.க., அ.தி.மு.க. இல்லாத அணியான தேசிய சனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. கட்சியின் பம்பரம் சின்னத்திற்கு வாக்களித்து மோடியைத் தலைமையளாராக -பிரதமராக-த் தேர்வு செய்ய ஆர்வமாக உள்ளனர்.

புதிய வாக்காளர்கள் அனைவரும் தங்களது குடும்பத்தினர் அனைவரிடமும்,  வாக்கிற்குப் பணம் வாங்கக் கூடாது என அறிவுரை வழங்கி வருகின்றனர்.

walmartகாங்கிரசு ஆட்சி வால் மார்ட்டு போன்ற பெரிய நிறுவனங்களை இந்தியாவிற்குள்  வணிகம் வியாபாரம் செய்ய  இசைவு அளித்துவிட்டு, உள்ளுர்  வணிகர்களின் தலையில் கல்லைத் தூக்கிப்போட்டு விட்டது. தமிழகத்தில் குடியால் பாதிப்படைந்த குடும்பங்களைப் பாதுகாக்க மதுக் கடைகளை மூட வேண்டும் என்று ஒரே நோக்கில் 1200 அயிரைக்கோல்(கி.மீ.) தொலைவில் நடைப் பயணம் செய்தேன்.

vaiko-nadai01மோடி ஆட்சி செய்யும் குசராத்தில் மதுக்கடைகள் திறந்தால் 20 ஆயிரம் கோடி வருமானம் வரும் என மோடியிடம் கூறியுள்ளனர். அதற்கு அவரோ 50 ஆயிரம் கோடி கிடைத்தாலும் நான் அதைத் திறக்கமாட்டேன் என உறுதியாகக் கூறினார்.

கடந்த தேர்தலில் போட்டியிட்டோர் காமராசர் வீட்டிற்குச் சென்றால் தோற்றுவிடுவோம் என்று பொய்க் கதைகளை கூறி வந்தனர். அக்கதைகளை மறைக்கவே நான் வேட்புமனு அளிப்பதற்கு முன் காமராசர் வீட்டிற்குச் சென்று அவரது சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு வந்தேன்.’’என்று கூறினார்.

vaikowithtop01