தமிழ்க்காப்புக் கழகத்தின் தமிழ்ப்பூசை – தமிழ்ப்பூசாரி கட்டுரைப்போட்டி
“என்னை நன்றாக இறைவன் படைத்தனன்,
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே” – திருமூலர்
தமிழ்க்காப்புக் கழகத்தின்
தமிழ்ப்பூசை – தமிழ்ப்பூசாரி கட்டுரைப்போட்டி
மொத்தப்பரிசு உரூ.10,000 /-
இறையன்பர்களுக்கும் பிற தமிழன்பர்களுக்கும்
வணக்கம்.
தமிழ்க்காப்புக்கழகத்தின் சார்பில்
“நமக்குத் தேவை தமிழ்ப்பூசைகளும் தமிழ்ப்பூசாரிகளும்”
என்னும் தலைப்பில் கட்டுரைப் போட்டி நடைபெற உள்ளது.
போட்டிக்கான பரிசுகளாக
முதல் பரிசு உரூ. ஐந்தாயிரம் (5,000/-)
இரண்டாம் பரிசு உரூ. மூவாயிரம் (3,000/-)
மூன்றாம் பரிசு உரூ. இரண்டாயிரம் (2,000/-)
வழங்கப்பெறும்.
பரிசுத்தொகைகளை இலக்குவனார் இலக்கிய இணையம் சார்பில்
வள்ளல் மாம்பலம் ஆ.சந்திரசேகர் வழங்குகிறார்.
கட்டுரைப் போட்டிக்கான விதிமுறைகள் வருமாறு:
- அகவை, படிப்பு, பணி, நாடு முதலான எவ்வேறுபாடுமின்றி அனைவருக்கம் பொதுவானது. எனவே, மாணாக்கர், மாணாக்கர் அல்லாதார், இளைஞர், முதியோர், நம் நாட்டவர் அயல்நாட்டவர் என அனைவரும் பங்கேற்கலாம்.
- பங்கேற்பாளர் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பெறும்.
- கட்டுரைகள் அகரமுதல (www.akaramuthala.in )மின்னிதழில் வெளியிடப்பெறும்.
- கட்டுரையாளர்கள் யாரையும் அல்லது எவ்வமைப்பையும் தாக்குதல் தாங்குதலின்றி நடுவுநிலைமையுடனும் கருத்துச் செறிவுடனும் எழுதி அனுப்ப வேண்டும்.
- தமிழ்ப்பூசைகள்/ தமிழ் வழிபாடுகள் அதற்றப்பட்ட, அகற்றப்படும் சூழல்கள், தமிழ்ப்பூசாரிகள் / தமிழ் அருச்சகர்கள் ஒதுக்கப்பட்ட, ஒதுக்கப்படும் சூழல்கள் முதலியவற்றைக் குறிப்பிட வேண்டும்.
6. யாவரும் அருச்சகராக அமர்த்தப்படலாம் என்பது குறித்த அண்மைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பினையும் நடுவுநிலைமையுடன் ஆராய்ந்து எழுதுவது சிறப்பாகும்.[ http://supremecourtofindia.nic.in/FileServer/2015-12-16_1450255713.pdf ] 54 பக்கம் உள்ள தீர்ப்பின்படி தேவையெனில் கட்டுரையாளர்கள், மின்னஞ்சலில் தொடர்பு கொண்டால் அனுப்பி வைக்கப்பெறும்.
- தமிழ்நாட்டில் ஆகமம் என்றால் தமிழ் ஆகமங்களைத்தானே குறிக்க வேண்டும், அவை என்ன கூறுகின்றன என்பனபற்றியெல்லாம் உரிய மேற்கோள் குறிப்புகளுடன் ஆராய்ந்து தெரிவிப்பது மேலும் சிறப்புடையதாகும்.
- பிழையின்றியும் அயற்சொற்கள் கலப்பின்றியும் எழுதுவது கட்டுரைக்குத் தகுதியைச் சேர்க்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
- கட்டுரைகளுக்குப் பக்க வரம்பு இல்லை.
- கட்டுரைகளை ஒருங்குகுறி (யூனிகோடு) எழுத்துருவில் கணியச்சிட்டு 3 படிகளில் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்:
தமிழ்ப்பூசை-தமிழ்ப்பூசாரி கட்டுரைப்போட்டி
தமிழ்க்காப்புக்கழகம்,
23எச்., ஓட்டேரிச்சாலை, புழுதிவாக்கம்
சென்னை 600 091
- கட்டுரையையும் கட்டுரையாளர் பற்றிய குறிப்புகளையும் கட்டுரையாளரின் ஒளிப்படத்தையும் பின் வரும் மின்வரிக்கு அனுப்ப வேண்டும்.
கட்டுரை வந்து சேருவதற்கான இறுதி நாள் : தை 16 , 2047 / சனவரி 30 , 2016,
- நடுவர் குழுவின் முடிவிற்கிணங்கப் பரிசிற்குரிய படைப்புகள் தேர்ந்தெடுக்கப்படும்.
அன்புடன்
இலக்குவனார் திருவள்ளுவன்
தலைவர், தமிழ்க்காப்புக்கழகம்
பேசி: 9884481652
Leave a Reply