vijakanthmeeting02

“திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் ஊழல் செய்த கட்சிகள்” என தேமுதிக தலைவர் வியகாந்து தெரிவித்தார்.

தேசிய சனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவின் மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் பேராசிரியர்  சே.கே.இரவீந்திரனுக்கு ஆதரவு தெரிவித்து தேமுதிக தலைவர் விசயகாந்து யானைக்கவுனியில் வாக்கு  திரட்டினார்.

அப்போது, விசயகாந்து பேசிய தாவது:

“தமிழகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் போக்குவரத்து நெரிசல் இருக்கிறது.

இந்நிலையில், முதல்வர் செயலலிதா குசராத்தை ஒப்பிட்டுப் பேசுகிறார். ஏற்கெனவே, மதுரவாயல் மேம்பாலம் திட்டம் கிடப்பில் கிடக்கிறது. மதுரவாயல் பாலம் திட்டத்துக்கு, ஏற்கெனவே திமுக  தரகுத்தொகை வாங்கிவிட்டதால், அத்திட்டத்தை செயல்படுத்த அதிமுக தயக்கம் காட்டுகிறது.  கையூட்டிலும், மது விற்பனையிலும், முதல்வரின் ஆணவத்திலும்தான் தமிழகம் குசராத்தை விட முன்னிலையில் இருக்கிறது. செயலலிதா மக்கள் விரோதப் போக்குடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்த, குசராத்து போல் நல்ல வளர்ச்சி பெற தேசிய சனநாயகக் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.

jayalalitha-meeting-helicopter03முதல்வர்  உகப்பூர்தியில் (எலிகாப்டரில்)  சென்று  பரப்புரை செய்கிறார். அவருக்குச் சாலைகளின் மோசமான நிலை தெரியவில்லை. வீடு கட்டித்தர 3  சிறுகாணி(சென்ட்)  நிலம் தருவதாகத் தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்தார். ஆனால், இதுவரை தரவில்லை.

6 மாதத்தில் மின்வெட்டை தீர்ப்பதாகக் கூறினார். ஆனால், மின்வெட்டையும் தீர்க்கவில்லை. சைதை துரைசாமி புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து  மனைவணிகத் தொழிலை நடத்தி வருகிறார்.

திமுக, அதிமுக இரண்டுமே ஊழல் செய்த கட்சிகள். அதனால், தேசிய சனநாயகக் கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். ஊழலற்ற ஆட்சி அமைக்கவும், இந்தியாவை வல்லரசாக்கவும் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்.”

இவ்வாறு விசயகாந்து பேசினார்.