தேவதானப்பட்டிப் பகுதியில் களமாக மாறிவரும் பாலங்கள்
தேவதானப்பட்டிப் பகுதியில் களமாக மாறிவரும் பாலங்கள்
தேவதானப்பட்டிப் பகுதியில் பாலங்கள் சாலைகள் ஆகியவை களமாக மாறிவருகின்றன.
தேவதானப்பட்டி பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெய்த மழையால் வானம் பார்த்தபூமிப் பகுதியில் எள், தட்டாம்பயிறு, உளுந்தம்பயறு, சோளம் போன்றவற்றைப் பயிரிட்டனர். தற்பொழுது அவை அறுவடை செய்யப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அறுவடை செய்யப்படும் கூல(தானிய)வகைகளைப் பறித்து அவற்றைக் காயவைத்து அதன்பிறகு அடித்து அல்லது மாடுகளை வைத்து மிதித்துப் பயிர்களை தனித்தனியாகப் பிரிப்பார்கள். அதன்பின்னர் காற்று வரும் திசையை நோக்கி முறம் போன்ற பொருட்களால் எடுத்து வீசும்போது நல்ல பயிர்கள் ஒரு பகுதியாகக் குவிந்து தேவையற்ற பொருட்கள் காற்றில் தூசியாகப் பறந்துவிடும்;. இதனை நெற்களங்களில் வைத்துச் செய்துவந்தனர்.
தற்பொழுது களங்கள் அனைத்தும் பேணப்படாமையால் சில களங்கள் தனியார் கவர்வாலும் பல களங்கள் வீட்டுமனைகளாக மாறியும் பயனற்றுப் போயின. இதனால் உழவர்கள் பாலங்களையும், சாலைகளின் இருபுறங்களையும் களமாகப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் உளுந்து, சோளப்பயிர்களில் வேகமாகச் செல்லும்போது வழுக்கி விழுந்து தலையில் காயப்படுவதுண்டு. இதில் பலர் அந்த இடத்திலேயே இறந்துள்ளனர்.
எனவே காவல்துறையினர் சாலை மற்றும் பாலங்களைக் களமாக பயன்படுத்தும் உழவர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
Leave a Reply