பாம்புகள் நடனம்
தேவதானப்பட்டி அருகே உள்ள எருமலைநாயக்கன்பட்டியில் பாம்புகள் நடனமாடுவதைப் பொதுமக்கள் கண்டுகளித்தனர்.
தேவதானப்பட்டி அருகே உள்ள எருமலைநாயக்கன்பட்டியில் சரவணன் என்பவருக்குச் சொந்தமான தோப்பு உள்ளது. தோப்பில் தென்னை, சப்போட்டா போன்ற மரங்களை வைத்து வேளாண்தொழில்புரிந்து வருகிறார். இவரது தோப்பில் ஏராளமான கரையான் புற்றுகள் உள்ளன. இப்புற்றுகளில் பாம்புகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. இவருடைய தோப்பில் அடிக்கடி மயில்களுக்கும் பாம்புகளுக்கும் சண்டை நடப்பதும் அதனைப் பொதுமக்கள் கண்டு களிப்பதும் வாடிக்கை.
இந்நிலையில் நேற்று மாலை நல்ல பாம்பும், சாரைப்பாம்பும் ஒன்றுடன் ஒன்று இணைந்து ஏறத்தாழ 1 மணிநேரம் நடனமாடின. இதனை அப்பகுதி மக்கள் பார்த்து மகிழ்ந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவருடைய தோப்பில் பாம்பு ஒன்று மயிலைத் தீண்டி அதனை வனத்துறையினர் கைப்பற்றிச் சிகிச்சை அளித்தனர். தற்பொழுது வெயில் காலம் தொடங்கியுள்ள்தால் இப்பகுதியில் பாம்புகள் நடமாட்டம் அதிகம் உள்ளதாக இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
எனவே வனத்துறையினர் இப்பகுதியைக் கண்காணித்துப் பாம்புகளைத் துன்புறுத்தாமலும், அடித்துக்கொல்லாமலும் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் இப்பகுதி மக்கள்
Leave a Reply