பிரான்சு பாராளுமன்ற ஆய்வுக்குழுவுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கச் சார்பாளர்கள் சந்திப்பு
தமிழர்களுக்கான பிரான்சு பாராளுமன்ற ஆய்வுக்குழுவினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பாளர்கள் சந்தித்தனர்!
பிரான்சு பாராளுமன்ற உறுப்பினர்களது தமிழர்களுக்கான ஆய்வுக்குழுவினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பாளர்கள் குழு சந்தித்துள்ளது.
பிரான்சு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற பல்வேறு கட்சி உறுப்பினர்களை உள்ளடக்கியதாக இந்த ஆய்வுக்குழுவின் தலைவி மரி சியார்சு புவே அவர்களுடன் இச்சந்திப்பு இடம்பெற்றிருந்தது.
பிரான்சு பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றிருந்த இச்சந்திப்பில் ஈழத்தமிழர்களின் நீதிக்கும் உரிமைக்குமான போhராட்டத்தின் சமகால நிலைவரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
தமிழ்மக்களுடைய இனச்சிக்கல் தொடர்பில் நீண்ட காலமாகத், தான் கொண்டுள்ள கரிசனையினைக் வெளிப்படுத்தியிருந்த தலைவி மரி சியார்சு புவே, ஈழத்தமிழர் சிக்கல் தொடர்பில் பிரான்சு அரசாங்க உயர்மட்டத்துடனான தனது செயற்பரிமாற்றங்கள் குறித்து எடுத்துரைத்திருந்தார்.
நா.தமிழீழ அரசாங்கத்தின் அவைத்தலைவர் நாகலிங்கம் பாலச்சந்திரன் தலைமையில் இடம்பெற்றிருந்த இச்சந்திப்பில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர்கள், மக்கள் சார்பாளர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
[படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்]
நாதம் ஊடகசேவை
Leave a Reply