புதுச்சேரி தனித்தமிழ்இயக்கத்தின் தனித்தமிழ்ச் சிறுவர்நாடகப் போட்டி
தனித்தமிழ்ச் சிறுவர்நாடகப் போட்டி
தனித்தமிழ் இயக்கம் நடத்துகிறது!
பரிசு உரூபா 1000.00
கடைசிநாள்: மாசி 16, 2048 / 28.2.2017
சிறுவர்கள் படித்தும் நடித்தும் மகிழ்வதற்கேற்ற 3 பக்க நாடகங்கள் 2 எழுதி அனுப்ப வேண்டும்!
முதற்பரிசு உரூபா 300.00
இரண்டாம் பரிசு உரூபா 150.00
மூன்றாம் பரிசு உரூபா 100.00
ஆறுதல் பரிசுகள் உரூபா 90.00 ஐந்து பேர்களுக்கு.
நெறிமுறைகள்
1.நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
2.பிறமொழிச்சொற்கள் கலவாத தனித்தமிழில் நாடகங்கள் இயற்றப்பட வேண்டும்
3.நாடகங்கள் மதநம்பிக்கை தவிர்த்த பகுத்தறிவு,அறிவியல் முதலிய புதிய கருப்பொருள்களில் இயற்றப்படவேண்டும்.
4. நாடகங்களின் 2 படிகள் கட்டாயம் அனுப்பப்பெற வேண்டும். ஒருபடியில் மட்டும் பெயர்,முகவரிகள் இருக்கலாம்.இன்னொரு படியில் வெறும் நாடகங்கள் மட்டுமே இருத்தல் கட்டாயம்.
5.தழுவல், மொழிபெயர்ப்புகள், முன்னரே வந்தவை, ஏடுகளில் வெளிவந்தவை ஏற்கப்படா
6.தகுதியால் தேர்ந்தெடுக்கப்படும் நாடகங்கள் ‘வெல்லும் துாயதமிழ்’ மாதஇதழில் வெளியிடப்படும்.
7.போட்டி முடிவுகளை சித்திரை 02, 2048 / 15.4.2017 ‘வெல்லும் தூயதமிழில்’ பார்க்கலாம் .
8. நாடகங்கள் தாளின் ஒரு பக்கம் மட்டுமே தெளிவாக எழுதப்பெற வேண்டும். பயன்படுத்தும் தாள் புதிதாக இருக்கட்டும்
- எழுத்தாளர்கள் தங்களின் புதியஒளிப்படங்கள், சரியான மின்னஞ்சல் முகவரி, நாடகங்களுக்கு ஏற்ற ஓவியங்கள் போன்றவற்றை விடுத்துவைக்கலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி:
முனைவர் க.தமிழமல்லன்,
தலைவர், தனித்தமிழ்இயக்கம்,
66,மா.கோ.தெரு, தட்டாஞ்சாவடி,
புதுச்சேரி 605009
தொலைபேசி 0413-2247072, செல்பேசி 9791629979
Leave a Reply