kalaignar-meetting01

காஞ்சிபுரம்: ”தமிழகத்தில் மோடி அலை வீசவில்லை; தி.மு.க., அலைதான் வீசுகிறது. வடக்கிலிருந்து வருவதாக கூறப்படும் மோடி அலை தமிழக மக்களைக் காக்குமா?,” என, தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசினார்.

காஞ்சிபுரத்தில் தி.மு.க., வேட்பாளர், செல்வத்தை ஆதரித்து தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாவது: “இன்றைக்கு ஏதோ அலை வீசுவதாகச் சொல்கிறார்கள். அந்த அலையெல்லாம் நம் இயக்கத்தின் அலை. மோடி அலை என்கிறார்கள்; அது வடக்கிலிருந்து தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது என்கிறார்கள். அந்த அலை தமிழகத்தையும், தமிழ் மக்களையும் காக்குமா? நேற்றைக்கு வந்த மோடி சொல்கிறார், அவரைச் சுற்றியிருக்கும் மக்கள் இவரால்தான் தமிழ்நாட்டிற்கு  விடிவு கிடைக்கும் என்று சொல்கிறார்களாம். தி.மு.க., ஆட்சியில் தமிழகம், தொழில் வளர்ச்சியில் தேசிய அளவில் மூன்றாவது இடத்தில் இருந்தது. செ., ஆட்சியில்  மது(டாசுமாக) தொழிற்சாலைதான் வளர்ந்துள்ளன. மதச்சார்பற்ற கொள்கைகளைக் கடைபிடிப்போம். அதற்கான நிலையான தன்மையை ஏற்படுத்துவோம். இந்தியாவில் இராமர் கோவில் கட்டாமல் வேறு எங்கு கட்டுவது என்று கேட்டவர் இந்த அம்மையார். அதற்கு பாபர் மசூதியை இடித்துதான் கட்ட வேண்டுமா? தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டியுள்ளேன் என்று கூறுகிறார். அவர் ஆட்சியில் இதுவரை கொலை 3330, கொள்ளை 1523,  நகை பறிப்பு 922, வழிப்பறி 917 நடந்துள்ளது. இந்த அளவில் சட்டம் ஒழுங்கு உள்ளது. எதற்கும் ஒருகாலம் உண்டு, நல்ல காலம் வரும், அது கட்டாயம் வரும். அதுவரை காத்திருப்போம்.” இவ்வாறு அவர் பேசினார்.