கார்த்திகை 06, 2051 ***  11/21/2020

இரவு 8:30  கிழக்கு நேரம்

அணுக்கி இணைப்பு / Zoom Link: http://tinyurl.com/fetna2020ik  

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் இலக்கியக் கூட்டம்

குளிரடிக்கும் சங்கக்காலம்

பாவலர் அறிவுமதி

அன்புடையீர் வணக்கம்

முழு நிலவும் கூதல் காற்றால்

முகிலோடு முகம் புதைக்கும்

குளிர்காலம்!

 

எலும்பை உருக்கும்

குறிஞ்சி நிலக் குளிரதில்

இதமான அனலொடு

அகிலும் சந்தனமும்

மணந்து வரக் குளிர் காயும்

குளிர் காலம்!

 

வாள் போர்க்களம் கண்ட

தலைவன் தலைவியின்

விழிப்போர்க்களம் கண்டு மகிழ

விரைந்து வீடு திரும்பும் குளிர்காலம்!

இயற்கையோடு இணைந்து மக்கள் வாழ்ந்த சங்கக் காலத்தின் குளிர் கால வருணணைகளை யவனரின் கோப்பையில் இட்டுப் பருக அழைக்கிறார் பாவலர் அறிவுமதி அவர்கள். நீங்களும் சுவைக்க வாருங்கள்.

பேரவை இலக்கியக்குழு