71aruvadai

தேவதானப்பட்டிப் பகுதியில் இயந்திரம் மூலம் நெல் அறுவடை

  தேவதானப்பட்டிப் பகுதியில் நெல் அறுவடை தொடங்கியது. தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டி, கெ..கல்லுப்பட்டி, சில்வார்பட்டி, செயமங்கலம், மேல்பகுதியில் பல காணி பரப்பளவில் நெல் பயிரிடல் நடைபெற்றது.

  கடந்த 3 ஆண்டுகளாகப் போதிய மழையின்மையால்; இப்பகுதியில் நிலங்கள் அனைத்தும் தரிசாக இருந்தன. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெய்த மழையால் இப்பகுதியில் உள்ள ஆறுகள், ஏரிகள், குளங்கள் நிரம்பின. வற்றி இருந்த கிணறுகளும் நீர்மட்டம் உயர்ந்து காணப்படுகின்றன. இதனால் இப்பகுதியில் நெல் பயிரிட்டனர். நெல் அறுவடைக்கு இப்பொழுது இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. 1 மணிநேரத்திற்கு 1,200 உரூபாய் வரை வாங்குகின்றனர். வேலையும் சீக்கிரம் முடிந்துவிடுவதால் யாரும் கூலி ஆட்களைக் கூப்பிடுவதில்லை. இருப்பினும் இயந்திரம் மூலம் அறுவடைசெய்யும்பொழுது நெல்லில் இருந்து கிடைக்கும் வைக்கோல் நொறுங்கி கால்நடைகள் உண்பதற்கு தகுதியற்றவையாக உள்ளது. இருப்பினும் அந்த வைக்கோல்களைக் கேரள வணிகர்கள் வாங்கிச்செல்கின்றனர்

71vaigainaneesu