2018-1 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும்
2018-1 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும்
வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்னூல் வெளியீட்டுப் பணி ஊடாக “மதுவை விரட்டினால் கோடி நன்மை!” என்ற மின்னூல் வெளியிட முன்வந்திருக்கிறது. இதனை வலைவழியே உலகெங்கும் அன்பளிப்பாக (இலவசமாக) பகிரவுள்ளோம். இம்மின்நூலுக்கான பதிவுகளை வலைப்பதிவர்களிடம் இருந்து 31/12/2017 இற்கு முன்னதாக எதிர்பார்க்கின்றோம்.
ஏற்கெனவே, இம்மின்நூல் வெளியீடுபற்றிக் கீழ்வரும் இணைப்புகளில் அறிவித்துவிட்டோம். கவிதைகள் வந்த வண்ணம் உள்ளன.
https://www.facebook.com/yarlpavanan/posts/1780289532013328
https://yarlpavanan.wordpress.com/2017/12/02/உங்களுக்குக்-கவிதை-எழுத/
http://www.ypvnpubs.com/2017/12/blog-post.html
மதுவினால் உடல் நலம், மக்கள் நலம், நாட்டு நலம் கெடுமென்றும் மதுவினால் சீர்கெட்ட நிலைமைகளைச் சுட்டிக்காட்டியும் நன்மை கருதி மதுவை விலக்கி வைக்குமாறு அறிவுறுத்தும் கவிதைகளை எழுதி அனுப்பலாம்.
தாங்கள் விரும்பிய தலைப்பில் முன்கூட்டியே எழுதிய பதிவாகவோ புதிதாக எழுதிய பதிவாகவோ இருந்தாலும் வலைப்பதிவர்கள் தங்கள் பதிவுகளை wds0@live.com என்ற மின்னஞ்சலுக்கு சொற்கோப்பாக இலதா சீருரு எழுத்துருவில் (MS-Word File ஆக Latha Unicode Font இல்) தட்டச்சுச் செய்து அனுப்பிவைக்க வேண்டும். பதிவுகள் யாவற்றையும் 10 – 20 வரிக் கவிதைகளாக (மரபுக் கவிதையாகவோ புதுக் கவிதையாகவோ) சொந்தப் படைப்பென உறுதிப்படுத்தி 31/12/2017 இற்கு முன்னதாக அனுப்ப வேண்டும்.
யாழ்பாவாணன் வெளியீட்டகம் பகிர்வு பொது உரிமையடிப்படையில் வெளியிடும் “மதுவை விரட்டினால் கோடி நன்மை!” என்ற அன்பளிப்பு ”(இலவச) மின்நூலில் எனது பதிவு இடம்பெற இசைவளிப்பதோடு ஒத்துழைப்பும் வழங்குகிறேன்” என மின்னஞ்சலில் குறிப்பிடவேண்டும்.
மின்னஞ்சலுக்கான தலைப்பு (Subject) ‘2018-1 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும்’ என்றவாறு இருக்க வேண்டும். அத்துடன் பதிவை அனுப்பும் வலைப்பதிவர் கடவுச்சீட்டுப்பட அளவான முகம் அளவு படத்துடன் சொந்தப் பெயர், புனைப்பெயர், மின்னஞ்சல் முகவரி, நடைபேசி எண், வலைப்பக்க முகவரி என்பன அனுப்ப வேண்டும். குறித்த மின்நூலில் தங்களை அறிமுகப்படுத்த அதுவே பயன்படும்.
சிறந்த மூன்று பதிவுகளுக்குப் பரிசில் வழங்குகின்றோம். புத்தகம் கண்டுபிடிப்பு அரண்மனை (Discovery Book Palace) (கே.கே.நகர், சென்னை)/ http://discoverybookpalace.com இல் இந்திய உரூபா 500/= இற்கு நூல்கள் வேண்டுவதற்கான Discovery Book Palace (கே.கே.நகர், சென்னை)/ http://discoverybookpalace.com இல் இந்திய உரூபா 500/= இற்கு நூல்கள் வேண்டுவதற்கான வெகுமதித் தாள்கள் (Gift Certificates) பரிசு பெறும் மூவருக்கும் தனித்தனியே வழங்கப்படும். இம்மின்நூல் வெளியீட்டிற்கான பரிசில்கள் 31/01/2018 இற்கு முன்னதாக அனுப்பி வைக்கப்படும்.
உலகெங்கும் வலைவழியே நற்றமிழைப் பரப்பிப் பேண ஒன்றிணைவோம்.
தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி,
யாழ்பாவாணன் வெளியீட்டகம்.
https://seebooks4u.blogspot.in/2017/12/2018-1.html
Leave a Reply