2018-1 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும்

2018-1 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்னூல் வெளியீட்டுப் பணி ஊடாக “மதுவை விரட்டினால் கோடி நன்மை!” என்ற மின்னூல் வெளியிட முன்வந்திருக்கிறது. இதனை வலைவழியே உலகெங்கும் அன்பளிப்பாக (இலவசமாக) பகிரவுள்ளோம். இம்மின்நூலுக்கான பதிவுகளை வலைப்பதிவர்களிடம் இருந்து 31/12/2017 இற்கு முன்னதாக எதிர்பார்க்கின்றோம். ஏற்கெனவே, இம்மின்நூல் வெளியீடுபற்றிக் கீழ்வரும் இணைப்புகளில் அறிவித்துவிட்டோம். கவிதைகள் வந்த வண்ணம் உள்ளன. https://www.facebook.com/yarlpavanan/posts/1780289532013328 https://yarlpavanan.wordpress.com/2017/12/02/உங்களுக்குக்-கவிதை-எழுத/ http://www.ypvnpubs.com/2017/12/blog-post.html மதுவினால் உடல் நலம், மக்கள் நலம், நாட்டு நலம் கெடுமென்றும் மதுவினால் சீர்கெட்ட நிலைமைகளைச்…

மதுவிலக்கு நாடகங்கள் மக்களை மயக்கா!

மதுவிலக்கு நாடகங்கள் மக்களை மயக்கா!     துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்     நஞ்சுண்பார் கள்ளுண் பவர். (திருக்குறள் 926)  என்று மது அருந்துநருக்கும் நஞ்சு அருந்துநருக்கும் வேறுபாடில்லை என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.   அரசே குடிமக்களைக் குடிகார மக்களாக்கி நாளும் நஞ்சுஊட்டுவது கொடுமையினும் கொடுமையன்றோ! இக்கொடுமையை ஒழிக்க மன்பதை ஆர்வலர்களும் மக்களும் சில கட்சிகளும் பல அமைப்பினரும் போராடி வருகின்றனர். ஆனால், மது ஒழிப்புப் போராளிகளை மடியச் செய்யும் அரசு நாடகமாடுகிறது.   மதுவிலக்கு என்ற சிந்தனை இந்தியத் துணைக்கண்டத்தில் முதன்முதலில் தமிழ்நாட்டிற்குத்தான்…

தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் துயரச்சூழலில் உள்ளனவோ! – இலக்குவனார் திருவள்ளுவன்

தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் துயரச்சூழலில் உள்ளனவோ!   பொதுவாக நாம் ஒருவரை எப்பொழுது நேரில் சென்று ஆறுதல் சொல்வோம்? அவர் தோல்வியைச் சந்தித்தால், அவர் வருத்தத்தில் இருந்தால், அவர் நோய்வாய்ப்பட்டிருந்தால், அவர் நேர்ச்சியில்(விபத்தில்) சிக்கியிருந்தால், தொழிலில் எதிர்பாராச் சரிவைக் கண்டிருந்தால், இத்தகைய துன்பத்துயரத்தில் மூழ்கியிருந்தால், அவருக்கு ஆறுதல் தரவும் நம்பிக்கை தரவும், உங்கள் பக்கம் இருக்கிறோம், கவலற்க எனச் சொல்வதற்காக  நேரில் சென்று தேறுதல் சொல்வதுதானே வழக்கம்.   ஒருவருக்கு ஒருவர் மற்றொருவருக்குப் பணஉதவி போன்ற ஏதேனும் உதவி செய்தால், உதவி பெறுபவர்தானே உதவி வழங்குநரை…

மதுவிலக்கு பரப்புரையாளர்கள்மீதான அடக்குமுறையா? ஆளுங்கட்சிக்குத் தண்டனையா?

மதுவிலக்கு பரப்புரையாளர்கள்மீதான அடக்குமுறையா? ஆளுங்கட்சிக்குத் தண்டனையா? செய்தியும் சிந்தனையும் [செய்தி : கடந்த மாசி 02, 2047 / பிப்பிரவரி மாதம் 14 அன்று  திருச்சிராப்பள்ளியில் மது ஒழிப்பு மாநாடு நடந்தது. அங்கு மதுஒழிப்பை வலியுறுத்திப்பேசிய,  மாநாட்டினை நடத்திய மக்கள் அதிகாரம்  இயக்கத்தின் மாநில அமைப்பாளர் சி. இராசு, செயற்குழு குழு உறுப்பினர் காளியப்பன்,  தாவீது இராசு, சென்னை ஆனந்தியம்மாள், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்புக் குழு வழக்கறிஞர் வாஞ்சிநாதன், தமிழ்நாடு  அரசின் சாராயக்கடை( தாசுமாக்கு) பணியாளர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர்…

சசிபெருமாள் மறைவும் மதுவிலக்கும்

மதுவிலக்குப்போராளி சசிபெருமாள் மறைவும் முழுமையான மதுவிலக்கும் அழிவந்த உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும் கள்ளொற்றிக் கண்சாய் பவர் (திருவள்ளுவர், திருக்குறள் 927)   தமிழ்நாட்டில் முழுமையான மது விலக்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனப் போராடி வந்தவர் காந்தியவாதி செ.க.சசிபெருமாள். பலமுறை உண்ணாநோன்புப் போராட்டங்களையும் நடத்தியுள்ளார். கடந்த (தி.பி.2045 / கி.பி. 2014ஆம்) ஆண்டில் சென்னை, வள்ளுவர் கோட்டத்தில், முழு மதுவிலக்கினை வலியுறுத்தி 36 நாள் உண்ணாநோன்பு இருந்துள்ளார். இவர் விளம்பரத்திற்காக இத்தகைய போராட்டத்தில் ஈடுபடவில்லை. கட்சி அரசியல் நோக்கிலும் இதனைச் செய்ய வில்லை. வாணாளெல்லாம்…

பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த மள்ளர்நாடு கோரிக்கை

பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த மள்ளர்நாடு கோரிக்கை   பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்தவேண்டும் என்று மள்ளர்நாடு அமைப்பின் சார்பாக மாநில கொள்கைப் பரப்புச்செயலாளர் செய்தியாளர்களுக்குச் செவ்வி ஒன்றை அளித்தார். அச்செவ்வியில் பின்வருமாறு கூறினார்: – அறவழிப்போராட்டத்தின் வழியாகப் போராடி வந்த மதிப்பிற்குரிய சசிபெருமாள் மரணம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மதுபானக் கடைகளின் முன் குடிப்பவர்களின் ஒவ்வொரு காலிலும் மறுபயன் எதிர்பாராமல் விழுந்து குடிக்காதீர்கள் என்று வேண்டிக்கொண்டு கொடூரமான அரக்கனான மதுவுக்கு எதிராகப் போராடி வந்த அவரின் இழப்பு என்பது காந்தியக் கொள்கைகளுக்கு ஒரு கரும்புள்ளியாகவம்…

மதுவுக்கு அடிமையானோரைத் திருத்தும் ‘மறுமலர்ச்சி’ பெரியசாமி – குள.சண்முகசுந்தரம்

  அரியலூர் மாவட்டம் மருதூர் மக்களைக் குடிப்பழக்கத்தில் இருந்து விடுவிப்பதற்காகத் தனி மனிதனாகப் போராடி வருகிறார் மண்டல நன்னடத்தை அலுவலராக இருந்து ஓய்வுபெற்ற பெரியசாமி. செயங்கொண்டம் அருகே இருக்கிறது மருதூர். எந்த முன்னேற்றமும் எட்டிப் பார்க்காத சிற்றூர் இது. கூப்பிடு தொலைவில் முந்திரிக் காடுகள் இருப்பதால் பள்ளிக் சிறுவர்கள் கூட இங்கே மது, சூது என வழிதவறிக் கிடப்பது வெகுஇயல்பான ஒன்று. தான் பிறந்த இந்த ஊரைத் திருத்துவதற்காக ஒன்பது ஆண்டுகளாகப் போராடி வருகிறார் ‘மறுமலர்ச்சி’ பெரியசாமி.   “சட்டம்(எம்.ஏ., பி.எல்.,) படித்த எனக்கு…

மதுவை ஒழிக்காதவரை தமிழகம் முன்னேறாது – நந்தினி நேர்காணல்

    குடிகார மாநிலத்தின் குமட்டலுடனும் ஒழுங்கு மீறல்களுடனும் தமிழகம் தள்ளாடிக்கொண்டிருக்கின்றது. மதுவினால் நாட்டுக்கு வீட்டுக்குக் கேடு என்பதைச் சொல்லிக் கொண்டே கேடுகெட்ட மாநிலமாகத் தமிழகத்தை பின்தள்ளிக் கொண்டிருக்கின்றனர் ஆட்சியாளர்கள். வீதிக்கு வந்த நாற்றத்தைச் சகித்துக் கொண்டு கடந்து போகும் மக்களிடையே அவ்வப்போது சில அரசியல் தலைவர்கள் அறிக்கைகள் வெளியிட்டு, ஒன்றிரண்டு அடையாளப் போராட்டங்களை நடத்தியதோடு சரி, அதைத் தாண்டி கொஞ்சம் நீளமாய் நடையாய் நடந்தும் பார்த்தாயிற்று. குடிகாரர்களின் அழுக்குக் கால்களில் விழுந்து கெஞ்சிப் பார்த்தார் சசி பெருமாள். உண்ணா நோன்பு இருந்தார். பழச்சாறு…

வெல்வீர் இனி… – புதுவைத் தமிழ்நெஞ்சன்

  மதுவிலக்கு மாணவப் போராளிகள் நந்தினி, சோதிமணி….. தமிழகத்தைச் சீரழிக்கும் மதுக்கடையை மூடு – அன்றே தலைநிமிர்ந்து தன்மானத்தோடு நிற்கும் தமிழ்நாடு மதுக்கடையை மூடாவிட்டால் நாட்டை விட்டே ஓடு – நீ மக்களுக்குச் செய்கின்றாய் இன்றுவரை பெருங்கேடு மது அருந்துவது உடல்நலத்திற்குத் தீங்கானது – என்று விளம்பரம் செய்து மதுவிற்பது கேடானது தமிழினத்தைச் சிந்திக்காது செய்வதற்கே மதுபோதை- அடடா திராவிடம் காட்டுகின்றது அறிவழிக்கும் தீயபாதை சிந்தனைக்கு வைக்கின்றார் மதுவாலே வேட்டு – தமிழா சிந்தித்து தெளிந்து போடடா கடைக்குப் பூட்டு மானமுள்ள தமிழனென்று உலகிற்குக்…