299 உரூபாயில் இணைய ஊழியம் – தமிழ்நாடு அரசு தொடக்கம்
299 உரூபாயில் 2 மாப்பேரெண்மம் (கிகாபைட்டுக்கு) இணைய ஊழியம்
தமிழ்நாடு அரசு தொடக்கம்
தமிழ்நாடு அரசு வடக்காட்சி வாயிலாக இல்லந்தோறும் இணையம் திட்டம், மாணவர்களுக்கான திரள்கணினி- இணையப் பதிவேற்ற சேவைத் திட்டங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் செயலலிதா
அரசுக் கம்பிவடத் தொலைக்காட்சி (cable t.v.) நிறுவனம் மூலம் குறைந்த கட்டணத்தில் இணையச் சேவை வழங்கும் திட்டத்தை முதல்வர் செயலலிதா தொடங்கி வைத்தார்.
மாநிலம் முழுவதும் மீவேக அகண்ட அலைவரிசைச் சேவைகள் (Broadband Services) மற்றும் இதர இணையச் சேவைகள் (Internet Services) குறைந்த கட்டணத்தில் அரசுக் கம்பிவடத் தொலைக்காட்சி நிறுவனம் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்று முதல்வர் செயலலிதா சட்டப் பேரவையில் அறிவித்தார்.
அதன்படி குறைந்த கட்டணத்தில் இணையச் சேவை வழங்கும் திட்டத்தை இன்று முதல்வர் செயலலிதா தொடக்கி வைத்தார்.
இதன்படி ஆறு வகையான திட்டங்களின் கீழ் குறைந்த கட்டணத்தில் இந்தச் சேவை அளிக்கப்படும். குறைந்தளவாக உரூ.299 கட்டணத்தில் மாதந்தோறும் 2 மாப்பேரெண்மம் (மாப்பேரயிரை எண்மம்( / காபைட்டு) அளவுக்கு இணையச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். உயரளவாக உரூ. 899 கட்டணத்தில் 40 மாப்பேரெண்மம் (கிகாபைட்டு) அளவுக்கு இணையச் சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்குக் கீழ் உள்ள படத்தைப் பாருங்கள்.
இது தொடர்பாக 1800 425 2911 என்ற கட்டணமில்லாத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
மேலும், தமிழ்நாடு மின்னணு நிறுவனம் மூலம் சென்னை-தரமணி டைடல் பூங்கா வளாகத்தில் 3 கோடியே 53 இலட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள தொழில்முனைவோர் மையம் – திரள்கணினி (cloud computing) சார்ந்த சேவைகள், இணையப் பதிவேற்ற சேவைகள் – 10 கோடியே 41 இலட்சம் உரூபாய் செலவில் தமிழ்நாடு மாநிலத் தரவு மையத்தில் அமைக்கப்பட்டுள்ள திரள்கணிணிய அமைப்பு ஆகியவற்றைத் தொடங்கி வைத்தார். மேலும், 93 கோடியே 28 இலட்சம் உரூபாய் மதிப்பீட்டிலான பேரிடர் மீட்பு மையம், தமிழ்நாடு மாநிலத் தரவு மையத்தில் இரண்டாம் கட்டச் செயல்பாடு ஆகியவற்றிற்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
Leave a Reply