தமிழ் வளர்ச்சித்துறை விருதுகள் அறிவிப்பு

தமிழ் வளர்ச்சித்துறை விருதுகள்  தமிழுக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் பாடுபடும் தமிழறிஞர்களைச் சிறப்பிக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு விருதுகளை வழங்கிச் சிறப்பித்து வருகிறது. அந்த வகையில், 2021ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சித்துறை விருதுகளை முதல்வர் மு.க.தாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்துத் தமிழக அரசு செய்திக்குறிப்பில் பின்வருமாறு தெரிவித்துள்ளது. தமிழ் மொழி – இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்மன்பதை உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள், தன்னலமற்ற தலைவர்கள் பெயரில், தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளை ஏற்படுத்தி வழங்கிவருகிறது. பேரறிஞர் அண்ணா விருது – நாஞ்சில் சம்பத்துமகாகவி…

சாதிகள் தமிழ் நாட்டுக்குப் புதியனவே! – சி.இலக்குவனார்

சாதிகள் தமிழ் நாட்டுக்குப் புதியனவே!   சாதிகள் தமிழ் நாட்டுக்குப் புதியனவே. சாதி என்ற சொல்லே தமிழன்று. இதுவே சாதி தமிழ் நாட்டில் தமிழரல்லாத வர்களால் புகுத்தப்பட்டது என்பதைத் தெற்றென அறிவிக்கும்.   சாதி இங்குச் செல்வாக்குப் பெற நுழைந்த காலத்திலேயே தமிழ் நாட்டுப் பெரியோர்கள் அதனைக் கடிந்து வந்துள்ளனர். தொல்காப்பியர் காலத்தில்கி.மு. ஏழாம் நூற்றாண்டில் சாதிமுறைகள் தமிழ்நாட்டில் கால்கொள்ளவில்லை. திருவள்ளுவர் காலத்தில் கி.மு. முதல் நூற்றாண்டில் சாதிமுறைகள் தமிழ்நாட்டில் வேர் கொள்ளத் தொடங்கியுள்ளன. அதனாலேயே வாழ்வியல் அறம் உரைத்த வள்ளுவர் பெருமான் “பிறப்பொக்கும்…

299 உரூபாயில் இணைய ஊழியம் – தமிழ்நாடு அரசு தொடக்கம்

299 உரூபாயில் 2 மாப்பேரெண்மம் (கிகாபைட்டுக்கு) இணைய ஊழியம் தமிழ்நாடு அரசு தொடக்கம்   தமிழ்நாடு அரசு வடக்காட்சி வாயிலாக இல்லந்தோறும் இணையம் திட்டம், மாணவர்களுக்கான திரள்கணினி- இணையப் பதிவேற்ற சேவைத் திட்டங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் செயலலிதா   அரசுக் கம்பிவடத் தொலைக்காட்சி (cable t.v.) நிறுவனம் மூலம் குறைந்த கட்டணத்தில் இணையச் சேவை வழங்கும் திட்டத்தை முதல்வர் செயலலிதா தொடங்கி வைத்தார்.   மாநிலம் முழுவதும் மீவேக அகண்ட அலைவரிசைச் சேவைகள் (Broadband Services)  மற்றும் இதர இணையச் சேவைகள் (Internet…

ஒலி பெயர்ப்பு வரையறைக் குழு அமைக்க அரசிற்கு வேண்டுகோள்!

சீரான ஒலிபெயர்ப்பை நடைமுறைப்படுத்த  தமிழக அரசிற்குத் தமிழறிஞர்களின் வேண்டுகோள்   மூல மொழிச் சொற்களை உள்ளவாறு உணர்வதற்கு உதவுவது ஒலிபெயர்ப்பு. அந்த வகையில் தமிழ்ச்சொற்களைப் பிற மொழியினர் அறிய உதவுவது ஒலி பெயர்ப்பு. பொதுவாக உரோமன்/ஆங்கில எழுத்துகளில் தமிழுக்கான ஒலிபெயர்ப்பு மிகுதியாகப் பயன்படுத்தப்படுகின்றன. [பிற மொழியாளர்கள் புரிதலுக்காகத்தான் ஒலி பெயர்ப்பே தவிர, தமிழில் ஒலி பெயர்ப்பு முறையில் பிற மொழிச்சொற்களைக் கலக்கக்கூடாது.] ஐரோப்பியர் வருகைக்கு முன்னர், எத்தகைய ஒலி பெயர்ப்பு முறைகளைப் பிற மொழியினர் கையாண்டிருந்தனர் என நமக்குத் தெரியவில்லை. ஐரோப்பியர் வருகைக்குப்பின்னரே தமிழ்…